படக்கவிதைப் போட்டி – 220
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
காயத்ரி அகல்யா (Gaya3 Akallya) எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.07.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
மழையில் நனைந்து…
வான்மழை வராது போனாலும்
வைய வாழ்வில் வருவதுண்டு,
கோன்முதல் குடிசையில் வாழ்ந்திருக்கும்
காசினி மாந்தர் வாழ்வினிலே
தோன்றி வளந்தரும் பாசமழை
தொடர்ந்து வந்திடும் நின்றிடாதே,
ஊன்றிடும் உறவிது தளைத்தோங்கும்
உடன்பிறந் தோர்தம் பாசமதே…!
செண்பக ஜெகதீசன்..
மழலைகளின் சாரல் மழை
—————————————–
வானவில்லையே வாளைத்து
குடையாய் பிடித்திட
சிந்தும் புன்னகை
மின்னலாய்
குடைக்குள் மழையாய்
இந்த மழலைகள்
வள்ளுவன் வாக்கு போல்
வறட்சி எனும் இடுக்கண் நீங்கிட
மழை வரும் என்று எண்ணி
சந்தோஷமாய் சிறிது மகிழ்ந்திட
நம்பிக்கையின் உச்சமாய்
மழை வந்து நனையாமல் இருக்க
வண்ண குடை கொண்டு வந்ததோ
இந்த மழலைகள்
சுட்டெரிக்கும் சூரியன்
உருண்டோடும் நீளவானில்
சட்டென மாறிய வானிலை
சில்லென்று வீசிய காற்றில்
வந்து நின்ற மணல் வாசம்
கோடை மழை வந்து எட்டி பார்க்க
வானவில்லை வண்ண தோரணங்களாய் கட்டி
தங்கள் நிலையை மாற்ற
வரும் மழையை
வரவேற்று நின்றனரோ
இந்த மழலைகள்
கருமேகம் கொட்டிய
மழைத்துளியில்
தீட்டிய வண்ணங்களை
குடையினில்
ஏந்திய மழலைகள்
சிந்தியப் புன்னகையில்
சில மூடரின் வர்ணங்களின்
எண்ணங்களும் கானல்
நீராய் கரைகிறதே….
மழலைகளின் சாரல் மழை
—————————————–
வானவில்லையே வாளைத்து
குடையாய் பிடித்திட
சிந்தும் புன்னகை
மின்னலாய்
குடைக்குள் மழையாய்
இந்த மழலைகள்
வள்ளுவன் வாக்கு போல்
வறட்சி எனும் இடுக்கண் நீங்கிட
மழை வரும் என்று எண்ணி
சந்தோஷமாய் சிறிது மகிழ்ந்திட
நம்பிக்கையின் உச்சமாய்
மழை வந்து நனையாமல் இருக்க
வண்ண குடை கொண்டு வந்ததோ
இந்த மழலைகள்
சுட்டெரிக்கும் சூரியன்
உருண்டோடும் நீளவானில்
சட்டென மாறிய வானிலை
சில்லென்று வீசிய காற்றில்
வந்து நின்ற மணல் வாசம்
கோடை மழை வந்து எட்டி பார்க்க
வானவில்லை வண்ண தோரணங்களாய் கட்டி
தங்கள் நிலையை மாற்ற
வரும் மழையை
வரவேற்று நின்றனரோ
இந்த மழலைகள்