நீலக்கடல் காரோண நாயகி நாகையரசி நீலாயதாக்ஷி

-நாகை வை. ராமஸ்வாமி

ஆனைமுகன், ஐயன், அன்னையுனை வலம் வர
மயிலமர் மால் மருகன் அகிலம் சுற்றி வர
நந்திதேவன் நல்வரவாய் மத்தளம் முழங்கிட
நான்மறை கோஷம் நாற்திசையும் ஒலித்திட
பறவையமர் பரந்தாமன் அரவமுடன் அண்ணனாய் ஆசி கூற
பிரமனுடன் அன்னமமர் கலைமகள் பாசமிகு பார்வையிட
ஆவின் அம்சமாம் அருள்மிகு திருமகள் பொன்மலர் கொட்டிட
நீலக்கடல் காரோண நாயகி நாகையரசி நீலாயதாக்ஷி
காளையமர் காசிநாதன் காந்தமாய் கவர்ந்திட்ட கார்மேகக் குழலழகி
மாசிலா வடிவழகி மகேசன் மடியமர் மாதுளம்பூ நிறத்தவளே
மாணிக்கத் தாடங்கம் மார்பணி பொன்மணி கைவளை காலணி
சதங்கையும் கொவ்வை செவ்வாயுன் புன்னகைக் கொப்பாமோ
கொச்சை மொழி பச்சைக் கிளி தவழும் பூந்தளிர் கரமுடை
சிங்கமமர் சிங்காரி சீர்மிகும் தாள் பற்றி
இச்சையிலா வாழ்வு பெற இச்சையுடன் தாள் பணிந்தோம்
இன்பப் பேறு பெற இறைஞ்சுகிறோம் அடி போற்றி!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க