சிங்கப்பூரில் ’தேவாரம்’ – நூல் வெளியீட்டு விழா – செய்திகள்

சிங்கை வாழ் சைவர்கள் இலகுவாகத் தேவாரம் பயில ஆங்கிலத்திலும் தமிழிலும் – சொற்களுக்கு நேரடிப் பொருளுடன் கூடிய நூலினை அருள்மிகு செண்பக விநாயகர் கோயிலார் வெளியிட உள்ளனர்.

www.thevaaram.org என்ற இணைய தளத்தின் ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயாவின் மேற்பார்வையில், ஓதுவார் மூர்த்தி திருவரங்க யயாதி, செயலாளர் சிவசுப்பிரமணியம் மயூரதன், திருமுறைத் தொண்டர் செண்பக விநாயகர் சைவப்பள்ளி முதல்வர் சிவசுப்பிரம்ணியம் ஐயா முதலியோரின் ஒருங்கிணைந்த உழைப்புடன், சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத் தலைவர் முனைவர் ஆர். தெய்வேந்திரன் ஆர்வப் பரிசாக உருவாகிய இந்நூல், சிங்கைவாழ் தேவார அன்பர்களின் தேவையை மனத்தில் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் வருகை தந்து பயனடைய வேண்டுகிறோம்.

இடம் : அ.மி.செண்பக விநாயகர் கோயில் கலா மண்டபம் (2ம் தளம்)

நாள்- வெள்ளிக்கிழமை 28-10-2011

நேரம்- மலை 7.00 மணி

சிறப்பு வருகையாளர் : தென்கிழக்காசிய ஆய்வுக்கழக இயக்குநர் தூதர் க.கேசவபாணி அவர்கள்.

About கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க