அறிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள்
நெடுஞ்செழியன்
ஈக்களின் கண்கள் கூட்டுக்கண்கள் வகையைச் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தனித்தனி ஆடிகள் இணைந்து உருவானதாகும். ஆகவே இவை பார்வைக்கூர்மை மிகுந்ததாக விளங்குகின்றன. சில வகை ஈக்கள் முப்பரிமாணப் பார்க்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. Ormia ochracea வகையைச் சேர்ந்த ஈக்கள் கேட்கும் திறனுக்கான உறுப்புகளையும் கொண்டுள்ளன.
உண்ணும் இயந்திரங்கள் என்று பட்டுப்புழுக்கள் அழைக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். இடைவிடாமல் உண்டு கொண்டிருக்கும் இவைகள் முதிர்ந்து பட்டுப்பூச்சியாகுமுன் குறைந்த பட்சம் நான்கைந்து முறைகள் தங்கள் தோலை உதிர்த்து விடுகின்றன.
அறிவியல் தகவல்கள் நல்லது தான். ஒரு தொடர்பு திட்டமிட்டு, அறிவித்து, பயனை கூட்டலாம்.