Tag: ராதா விஸ்வநாதன்

  • பூட்டிய இதயங்களுக்குள் புகுந்து வா!

    பூட்டிய இதயங்களுக்குள் புகுந்து வா!

    ராதா விஸ்வநாதன்

    அன்பே….
    எத்தனை பெயர்கள் உனக்கு
    நீ இருக்குமிடமே சொர்க்கம்
    மண்ணுக்குள் வளம்
    மலருக்குள் வாசம்
    மேகத்துக்குள் நீர்
    பெண்மைக்குள் தாய்மை
    உறவுக்குள் நட்பு
    தேசத்தின்பால் கடமை
    இறையைக் காண பக்தி
    இறை காட்டுவது கருணை

    அன்பே …
    எத்தனை பெயர்கள் உனக்கு
    இருப்பிடத்திற்குத்
    தகுந்தாற்போல்..

    நீ இருந்தால்
    சுழலும் உலகம்
    உடலும் உழைக்கும்
    உயிர்கள் வாழும்
    பூக்களும் பூக்கும்
    பூக்கள் மட்டுமில்லை
    மனங்களும் தான்
    அமைதியின் வாசத்துடன்

    உன் ஆளுகையில்
    பருவங்கள் பொய்ப்பதில்லை
    கோடையின் விடுமுறையில்
    வசந்தங்கள் வருகின்றன
    உன் அரவணைப்பில்
    எல்லைகள் அழிகின்றன
    வேரற்று வீழ்கிறது
    வேற்றுமையும்…..

    நீ மறைந்தால்
    எங்கும் முளைக்கும்  கல்லறை
    காளான்களைப் போல்
    கருவறையும் கல்லறையாகும்
    கங்கையும் வண்டுவிடும்
    அன்புக்கு விலை பேசுவது
    மனிதனின் இயல்பு
    உன் இயல்பினை
    என்றும் மறந்து விடாதே
    எதிர்பார்ப்பு இல்லாமல்
    பூட்டிய இதயங்களைத்
    திறந்து புகுந்து விடு

    Share
  • எங்கே நிம்மதி?

    எங்கே நிம்மதி?

    ராதா விஸ்வநாதன்

    தெரியாமல் சொல்வதை விட
    தெரிந்து சொல்லும் பொய்
    நிம்மதிக்குச் சாவு மணி

    உண்மைக்குச் சவப்பெட்டி
    தயாராகும் போது
    தொங்கி விடுகிறது
    நிம்மதி தூக்கில்…

    பொய்களின் பூகம்ப அதிர்வில்
    புதைந்து விடுகிறது நிம்மதி
    செய்நன்றி மறந்த மறுகணம்
    செத்து விடுகிறது நிம்மதி

    நிம்மதியின்
    நிழல் கூட நிற்பதில்லை
    பிறர் மதிக்க நாம்
    வாழ நினைத்தால்…

    ஆசைகள்
    பேராசையாக வளரும்போது
    நிராசையாகி விடுகிறது
    நம் நிம்மதியும்

    தானத்திலும் கூட
    நிதானம் தவறினால்
    மயான வாழ்வுதான்
    நிம்மதிக்கு

    உழைக்க மறுத்து
    உண்டு வாழ நினைக்கும் போது
    உயிர்கள் தவிக்கும்
    நிம்மதிக்காக


    Photo courtesy: https://www.maxpixels.net

    Share
  • மெய் வாழ்க்கை

    மெய் வாழ்க்கை

    -ராதா விஸ்வநாதன் 

    வாழ்க்கையே முடிந்து விட்டது
    வாழ்வது எப்படி என்ற தேடலில்!
    வாழ்ந்தவரை வழி கேட்டேன்
    வந்தது பதில் வாழ்ந்து பாரென!

    குழந்தையின் முகத்தில் தேட
    குறைகளைக் காணாதே எங்கும்
    நிறைதனை எதிலும் பாரடா
    நிம்மதி உன் காலடியிலே என்றது

    சாதித்தவர்களைக் கேட்டேன்
    சாதிப்பதற்கு எல்லையே இல்லை!
    சாதிக்க வேண்டியது என்ன என்று
    சோதித்துப் பார் உனை என்றனர்!

    மனத்தைச் சோதனைக் கூடமாக்கி
    எண்ணங்களை வேள்வித் தீயிலிட்டு
    என்னையே இழந்ததும் புரிந்தது,
    தன்னை இழப்பதே பூரணம் என்று!

    பூரணத்தில் நிற்பவன் மெய்ஞானி
    புரிந்தவனைத் தேடுபவன் மெய்யன்பன்
    புரிந்ததைக் காட்டுபவர் நல்லாசான்–அப்
    புரிதலில் வாழ்தலே மெய் வாழ்க்கை!!

    Share
  • வெகு தூரத்தில் இருந்தோம்

    ராதா விஸ்வநாதன் 
    
    

     

     

    வெகு தூரத்தில் இருந்தோம்

    தொடர்பு கொள்ள

    சாதனங்கள் இல்லை

    இருந்தும்

    நம் தொடர்புகள், சொந்தங்கள்

    துண்டிக்கப் படவில்லை

     

    இன்றோ

    சாதனங்கள் உண்டு பல

    இருந்தும் இருக்கிறோம்

    தொடர்பு எல்லைக்கு அப்பால்

    துண்டிக்கப்பட்டு

    Share
  • எல்லைச்சாமி

    ராதா விஸ்வநாதன்

     

    கிழக்கு வெளுத்திடுச்சு
    சேவலும் கூவுது
    தூக்கத்தில துக்கத்தை
    தொரத்த நினைச்சேன்
    தோத்துதான் போயிட்டேன்

    பாயும் தேஞ்சு போச்சு
    படுத்தா தூக்கம் வருதா என்ன
    துக்கம்தான் வருது மச்சான்
    இந்த துக்கத்திலேயும் சுகம் இருக்குது
    நாட்டை காக்க என் மச்சான்

    நாலு வருசமா நிக்கிறே
    எல்லையிலே நீ அங்கனே இருக்க
    எல்லைச்சாமி காவல் இருக்கு இங்கனே
    என் நினைப்பு வரக்கூடாது மச்சான்
    நாட்டு மண்ணை காக்கணும் மச்சான்

    ஏமாந்து போக வேணாம் மச்சான்
    எதிரியே கொன்னு போடு இல்லே
    மார்லே குண்டு பட்டு வா
    என் மாராப்பு சேலை வீராப்பை காட்ட
    எதிர் பார்த்து நிப்பேன் நிலப்படியிலே

    Share
  • இது என் கண்ணீரே

    ராதா விஸ்வநாதன்images

    அன்று
    உன் முன் கோபம்
    என்னைக் கொன்று விட்டது
    உயிர் போகும் முன்
    கொடுத்தேன் தானமாய்
    என் கண்களை
    இன்று
    என் புகைப் படம் முன்
    கண்ணீர் விடுவது …
    நீ அல்ல
    அன்று
    நான் கொடுத்த
    என் கண்களே
    கண்ணீர் விடுகிறது  எனக்காக
    அனுப்புனர்
    நந்திதா

    http://sahzu.wordpress.com/2013/12/22/a-good-cry/ 

    Share
  • ஓர் விண்ணப்பம்

     ராதா விஸ்வநாதன் index

    பிரம்மனே..
    பருவத்தில்
    கொடுத்தாய் பல
    இராசாயன மாற்றங்கள்
    வாழ்த்துகிறோம் அதற்காக

    இன்று….
    மீண்டும்
    உனக்கு ஓர் விண்ணப்பம்

    தகாத முறையில்
    பெண்மை தாக்கப் பட்டால்
    பெண்மையைக் காக்க
    கொடுப்பாய் புதியதொரு
    இரசாயன மாற்றம்

    அக்கணத்திலே கொடியதொரு
    நாற்றத்துடன் உடல் விஷமாகிட
    அருள் வேண்டுகிறோம்
    கலியுக பாஞ்சாலிகள்

    அநுப்புனர்…….
    வி. நந்திதா

    படத்துக்கு நன்றி

    http://thestorybehindthefaces.com/tag/picasso/

    Share
  • இருபது தரும் மயக்கமும் விழிப்பும்

    ராதா விஸ்வநாதன்7-images
    ஆறு வழிச் சாலைகள்
    அதில் குழிகளுக்கோர் குறைவில்லை
    எதையோ எட்டிப் பிடிக்கும் வேகத்தில்
    நகரப் பேருந்து
    கூட்ட நெரிசல் தரும் குலுக்கல்கள்
    ஆஹா….
    அன்று தென்றலாய் தீண்ட
    இன்றோ
    நெருப்பாய் எரிகிறதே
    காரணம்
    அன்று கும்பலில்
    நான் நின்றேன் இருபது வயதில்
    இன்று கும்பலில்

    இருபது வயதில் என் மகள்…….

    படத்துக்கு நன்றி

    http://www.worldrenew.net/our-stories/team/mark-vanderwees/dark-world-human-trafficking

    Share