கிரேசி மோகன் 

பெருமாள் திருப் புகழ்….
தனதந்தன தத்தன தத்ததன தனதந்தன தத்தன தத்ததன
தனதந்தன தத்தன தத்ததன -தனதான

திருவிண்நகர் உப்பிலியப்ப பெருமாள்
———————————————————————

f4808c4f-4e79-4512-a339-aba78b681d6e
“மனமுய்ந்துப ரத்தினில் சித்தமென உறவைந்துயெ ழுத்தவன் வெற்பருணை
குடிவந்ததி ருட்சுழி சுத்தமன -ரமணேசர்
புகல்கின்றஅ வித்தையை பற்றிவளர் புலனைந்தைய டக்கிவுயர்
சுகமங்கள நிட்டையில் நிற்கவருள் -புரிவாயே

சினம்பொங்கநு தற்கனல் ருத்திரனை மதனம்பும யக்கிட விட்டகணம்
ஒருசம்பவ புத்திரன் ,முத்தமிழின் -முதலாளி
குடம்வந்தஅ கத்தியன் சத்குருவின், குறமங்கையும் அத்தியும் பத்தினிகள்
எனசெந்தில்க டற்க்கரை நிர்பயனின் -முறைமாம

பனைமஞ்சனை இட்டழ மக்கள்மனை பறைசங்கொலி சத்தம தற்க்கிடையில்
பிணிமுந்திட தெற்க்கெமன் தொட்டிடுமுன் -வருவாயே
மணலுண்டக ணத்திலி டைச்சிதொழ விசுவந்தனை சொப்பிதழ் சிற்றறையில்
முனிபுங்கவர் மட்டிலும் எட்டியதை -அருள்வோயே

கனகம்பொழி பத்தினி பக்கமுற இணைதன்நிக ரற்றிட இத்தரையில்
திருவிண்நகர் உப்பிலி அப்பனென -திருநாமம்
திகழ்சங்குசு டர்ச்சுழல் சக்கிரமும் சரணம்புகு பக்தரின் பக்கமென
அபயம்தரு நிச்சய நட்புடைய -பெருமாளே”….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *