திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

1

பாஸ்கர்

அவர் பெரிய உயரம் இல்லை. வசீகரமான முகம் இல்லை. ஆனாலும் அவரின் நடிப்பு, சரித்திரச் சிகரம். அவர் டி எஸ் பாலையா. அவர் மக்கள் திலகம் நடிகர் திலகத்திற்கு முன்னோடி.

பாலையா என்றால் எல்லோரும் காதலிக்க நேரமில்லை, தில்லானாவைச் சொல்வார்கள். இந்த வண்ண சினிமாவிற்கு முன் அவரின் பாமா விஜயம் படத்தைப் பாருங்கள். அது போல ஒரு செறிந்த நடிகர் இந்தக் காலத்தில் தேடினால் கூட, கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இது அவர்களைக் கொடுத்த நடிப்புப் பள்ளியின் பலம்.

அவர் குரல், செய்கை எல்லாம் நம் வீட்டு மனிதர்களைக் கண் முன் நிறுத்தும். அவரின் டைமிங் சென்ஸ், வசன உச்சரிப்பு, சட்டென மாற்றிக்கொள்ளும் முக பாவம், கணேசனே கொஞ்சம் பயப்படும் ராதா, ரங்காராவ் பட்டியலில் பாலையாவுக்கும் இடம் உண்டு. அவர் கடைசிக் காலத்தில் நடித்த எதிரொலி படத்தில் கூட அதைக் காணலாம்.

இன்று இயல்பான நடிப்பு என்று கொண்டாடும் நடிகர்கள் பலர், அவரின் படங்களைப் பார்க்க வேண்டும். அவர் இயக்குரின் நடிகர் – பாத்திரத்தின் நடிகர். இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவர் எனப் பத்மினி பாடும்போது கணேசன் தொடையில் லேசாகத் தட்டி தனது ஆதங்கத்தைச் சொல்லும் போது அவர் முகத்தைக் கவனியுங்கள் பிரில்லியன்ட்.

பாவ மன்னிப்பு படம் என நினைவு. வந்த நாள் முதல் பாடலில் சிறையிலிருந்து வரும் காட்சி. கொஞ்சம் தயங்கி நின்று தலையைச் சொரிந்துகொண்டு வெளியேறும் காட்சியை அவர் உருவாக்கத்தில் கொண்டு வந்ததை எந்தப் பூனே பிலிம் கல்லூரியும் சொல்லித் தர முடியாத ஒன்று.

அவருக்கு 2021 ஆகஸ்டு 23 அன்று, நூற்று ஏழாவது பிறந்த நாள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

  1. வணக்கம்! நுண்ணிய ரசனை! திரு பாலையாவின் இதனையொத்த மற்றொரு ரசப் பதிவு நகுமோமு வாசிக்கும் போது திருமதி பத்மினி வண்டியில் வந்து இற்ங்கியதைக் கண்ட நடிகர் திலகம் பாலையாவை நோக்க, அதற்குப் பாலையா அசைக்கும் தலையசைவு கோடி பெறும்! ‘விளக்கேற்றுவது நான்” கடந்த ஐம்பதாண்டுக் காலமாகப் போலிப் பெண்ணுரிமையால் சீரழித்த கலாச்சாரத்திற்கு உரிமையான ஒரு சமுதாயத்தின் ஒரு வரி அடையாளம்! அற்புதம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *