நூறு சத உறுப்பினர்கள் கொண்ட நேரு தபால் தலை மன்றம்
தூரிகை சின்னராஜ்
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் நகரில் உதகை சாலையில் இருக்கும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களும் நேருவின் பெயரில் அமைந்துள்ள தபால் தலை சேகரிப்பு மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். 1999 இல் தொடங்கப்பட்ட நேரு தபால் தலை மன்றம் ஆண்டுதோறும் தபால் தலை கண்காட்சியை நடத்தி வருகிறது.
பள்ளி மாணவர்கள் இதை பொழுது போக்காக மட்டும் செய்யாமல் பல்வேறு துறைகளில் போது அறிவை வளர்த்திட வழிவகை செய்வதாக கூறுகிறார் இதன் பொறுப்பாசிரியரும் சமூக அறிவியல் துறை முதுநிலை ஆசிரியருமான சுந்தரமகாலிங்கம்.
மேலும் அவர் கூறுகையில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு தபால் தலை வடிவமைப்பு போட்டியை தபால் துறை நடத்தி வருகிறது. இந்திய அளவில் வெற்றி பெரும் குழந்தையின் ஓவியம் சிறப்பு தபால் தலையாக நவம்பர் பதினான்காம் நாள் வெளியிடப்பட்டு குழந்தைகளை பாராட்டி பரிசளிக்கிறது இந்திய தபால் துறை என்கிற தகவல் நம் செல்லங்களுக்கு இனிப்பான செய்திதானே.