அரவணைப்பு
ஜெ.ராஜ்குமார்
நடை பயிலக் கற்றுக் கொடுத்தாள் அம்மா!
என்
கண்களினின்றும் கண்ணீர் வந்தால் – எனை
மடியில் போட்டுக்
கண்ணீர் துடைப்பாள்!
துள்ளிக் குதித்த காலங்களில்
பள்ளி செல்லும் –
பக்குவம் கற்றுக் கொடுத்தாள்!
சொல்லில் சிறந்தவனாய் –
வெல்லும் தனித்திறமை
நாளும் கற்பித்தாள் –
நலமுடன் நான் வாழவே –
நல்ல உளமுடன் எனை அரவணைத்தாள்!
தெளிவுடன் நான் நடக்கும் – என் பாதை
தெரிந்தவர் பின்பற்றவே – எனை
உயிருடன் உருவாக்கினாள் – எனை
உயரத்தில் வைத்துப் பார்த்தாள்!
சிகரத்தைத் தொட்டு விடும் தைரியம் எனக்கிருக்கு!
விந்தை பல புரியும் சக்தியுமிருக்கு!
தந்தையும் தாயும் பெற்றெடுத்த செல்வன் நான்
சந்தனத் தேரிலே ஊர்வலம் வருவேன்.
அன்னையின் அரவணைப்பில் –
விண்ணையும் தாண்டிடும் என் எண்ணங்கள் யாவுமே!
படத்திற்கு நன்றி:http://www.shutterstock.com/pic-45803236/stock-photo-portrait-of-angelic-baby-and-his-mother.html