சக்தி சக்திதாசன் உடன் குரல் நேர்முகம்

3

செவ்வி: அண்ணாகண்ணன்

sakthidasanஇங்கிலாந்தில் 36 ஆண்டுகளாக வசிக்கும் எழுத்தாளர் சக்தி சக்திதாசன், தமிழ் இணைய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இணையம் உருவாக்கிய எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இணையத்தில் எழுதும் முன்னரே இவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், இணையம் வந்த பிறகே அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய பல வடிவங்களிலும் எழுதினார். பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்ப் பூங்கா என்ற மின்னிதழையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் சக்திதாசன், பொன்விளையும் மின்வெளியில் கண்சிமிட்டும் நட்சத்திரம்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் 1956ஆம் ஆண்டு பிறந்த இவர், 1975ஆம் ஆண்டு இலண்டனுக்குச் சென்றார். அதன் பிறகு இங்கிலாந்தையே தன் நிரந்தர வாழ்விடமாகக் கொண்டார். இங்கிலாந்தின் நடப்பு நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்து, எழுதி வருபவர். இலண்டனின் மாறிவரும் முகங்களுக்கு ஒரு மவுன சாட்சியாகத் திகழ்பவர். மேற்குலகில் வாழ்ந்தாலும் கீழை நாட்டு மனநிலையிலிருந்து இன்னும் மாறாதவர்.

தமிழில் 6 நூல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் தமிழ்ப் பூங்காவில் வண்ண மலர்கள், தமிழே நதியாய் கவிதை வழியாய் என்பன கவிதை நூல்கள். திசையின்றிச் செல்லும் திருமணங்கள், கண்ணதாசன் ஒரு காவியம் ஆகியன கட்டுரை நூல்கள். உறவெனும் விலங்கு, தீஞ்சுவை திருக்குறள் கதைகள் ஆகியன சிறுகதைத் தொகுப்புகள். இவை அனைத்தையும் மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இவருடைய தீஞ்சுவை திருக்குறள் கதைகள் என்ற நூல், 2011 சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியானது. அதை முன்னிட்டு, சென்னைக்கு வந்த சக்தி சக்திதாசனை வல்லமை ஆசிரியர் அண்ணாகண்ணன், நேர்கண்டார். அதன் ஒலி வடிவினைக் கீழ்க்கண்ட தளத்தில்  கேட்கலாம்.

http://www.4shared.com/audio/UuFlDVYV/Sakthidasan_interview_final.html

நேர அளவு: 73 நிமிடங்கள்

மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சக்தி சக்திதாசன் உடன் குரல் நேர்முகம்

  1. Mr Sakthi, besides a great writer and a poet, is a very good human being who respects mankind a lot. A humble and gentle person I have ever seen. Wishing him success in all his endeavours!

  2. இந்த நேர்முகத்தை எனது யூடியூப் அலைவரிசையில் வெளியிட்டுள்ளேன். வாய்ப்புள்ளோர் கேளுங்கள் – https://www.youtube.com/watch?v=WLS6anFtWEo  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.