கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் – மார்ச்சு 2011

0

கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தொடர்பாக வந்துள்ள அழைப்பிதழ்:

நண்பர்களே,

2011 மார்ச்சு 3ஆம் தேதி, வியாழக்கிழமை, கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

வானியல் என்றாலே இரஷ்யாவும் அமெரிக்காவும்தான் நம் நினைவுக்கு வரும்; இந்தியா அல்ல. காரணம், நமக்கும் வானியலுக்கும் தொடர்பில்லை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டில்தான், இத்துறையில் நாம் ஆர்வம் செலுத்தி வருவதாக நம்புகிறோம். உண்மையில், வானியல் துறையில் இந்தியா செலுத்திய ஆர்வமும் கண்டறிந்த விஷயங்களும் ஏராளம்.

இந்தியாவில் வானியல் துறை தோன்றி, வளர்ந்து, செழித்த அற்புதமான கதையை இந்த முறை தெரிந்துகொள்ளப் போகிறோம்.

* வானியல் துறை இந்தியாவில் எப்போது தோன்றியது?

* தோற்றுவித்தவர்கள் யார்?

* இந்திய வானியலின் அடிப்படைக் கருத்துகள் என்ன?

* வேத ஜோதிடம் மெய்யா, பொய்யா?

வானியலின் அறிவியல் பின்னணியை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எளிமையாக விளக்க இருக்கிறார் டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன். இவர் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் என்ற தன்னாட்சி அமைப்பில் அறிவியலாளராகப் பணியாற்றுகிறார்.

இடம் : கிழக்கு மொட்டைமாடி, 33/15,  எல்டாம்ஸ் சாலை,  ஆழ்வார்பேட்டை,  சென்னை – 18

நாள்     : 3 மார்ச் 2011, வியாழக்கிழமை

நேரம்  : மாலை 6.30 மணி

அனைவரும் வருக. அறிவியல் அறிக.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *