ரியல் எஸ்டேட் துறையில் நடிகை நமீதா!!!
தமிழ்த் திரைத் துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நமீதா, இப்போது புதிதாக ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்துள்ளார்.
மும்பை அருகே உள்ள மலைப் பிரதேசமான ‘ஆம்பி வேலி’ நகரில் அழகழகான வீடுகளை உருவாக்கித் தரும் நிறுவனத்தைத் தன் நண்பரும் பங்குதாரருமான பரத் கபூருடன் இணைந்து நமீதா ஆரம்பித்துள்ளார்.
மிகச் சிறந்த வீடுகளை, பல்வேறு அழகிய வடிவமைப்புகளில் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கி வருகிறார்கள். நமீதாவின் இந்த நிறுவனம் மூலம் ஏற்கெனவே சில திரையுலகப் பிரபலங்கள் ஆம்பி வேலியில் வீடுகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாஜி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனத்தின் பெயரில் விற்கப்படும் இந்த வீடுகளின் விலை ரூ 3 கோடியிலிருந்து 18 கோடி வரை, பரப்பளவு, வடிவமைப்புக்கேற்ப மாறுபடுகிறது. மும்பையைச் சேர்ந்த ‘நூரேன் ஜூமானி’ என்ற பிரபல இன்டீரியர் டிசைனருடன் இணைந்து புதுப்புது டிசைன்களை உருவாக்கும் பணியில் நமீதாவும் அவரின் தலைமையில் இயங்கும் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர் .
2011 மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று இந்தப் பணியை அதிகாரப்பூர்வமாக நமீதா தொடங்கினார். சென்னையிலும் இதுபோன்ற அழகிய வீடுகளை உருவாக்கித் தரும் திட்டத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.
=============================
தகவல்: மக்கள் தொடர்பாளர் அ.ஜான்