நடிகர் விக்ரமுக்கு டாக்டர் பட்டம்!
தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விக்ரமுக்கு இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
நடிகர் விக்ரம், சேது, தில், தூள், அந்நியன், காசி, பிதாமகன் போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்தவர். சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்பட, பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவ்வாறாகப் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியதைக் கெளரவப்படுத்தும் விதத்தில் இந்த டாக்டர் பட்டத்தை நடிகர் விக்ரமிற்கு வழங்குவதாக, இத்தாலியிலுள்ள “யுவர்சிட்டா பாபுலர் ஸ்டடி டீ-மிலானோ” (Universita Popolare Degli Studi Di Milano பல்கலைக்கழகத்தின் இயக்குநர்களும் செனட் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.
2011ஆம் ஆண்டு, மே மாதம் 29ஆம் தேதியன்று இத்தாலி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விக்ரம் இவ்விருதினைப் பெறுகிறார்.
நடிகர் விக்ரம் பற்றி மேலும் அறிய – http://ta.wikipedia.org/wiki/விக்ரம்
=================================
தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்
டாக்டர் பட்டத்துக்கு விக்ரம் தகுதி ஆனவர் தான். அவரது அடுத்த படம், தெய்வ திருமகன் அவருக்கு மேலும் புகழைச் சேர்க்கும். தேசிய விருது கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
– உதகை சத்யன்