நிலவொளியில் ஒரு குளியல் – 22

8

ஸ்ரீஜா வெங்கடேஷ்

Srija venkateshசென்ற வாரத்துக்கு முந்தைய வாரப் பத்தியில், ஜப்பானில் நடந்த இயற்கை சீரழிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்த வாரம் அந்தச் சீரழிவுகளை அவர்கள் எத்தனை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக அணுகியிருக்கிறார்கள் என்பது பற்றிப் பேசலாம். இது குறித்து தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கும் என் நண்பர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதைப் படித்ததும் ஜப்பானிய மக்கள் மேல் எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது. வரிசையாக ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

ஜப்பானில் நடந்த இயற்கைப் பேரழிவினால் பலர் வீடுகளையும் உடைமைகளையும் இன்னும் பலர் உற்றார் உறவினர்களையும் பறி கொடுத்தனர். அந்த நிலையிலும், நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறியோ, தெருவில் நின்று கத்தியோ, தங்களுடைய துயரங்களைப் பிரகடனப்படுத்தவில்லை. தங்களுக்கு வந்த துயரத்தை அதன் கனத்தை மனத்தில் வாங்கி, அதிலிருந்து மீளும் முறையை யோசித்திருக்கிறார்கள். என்ன ஒரு மன உறுதி. இதைத்தான் எதையும் தாங்கும் இதயம் என்பது. ஆனால் நம் மக்களோ ஒரு சிறு பிரச்சனை என்றாலும் தற்கொலை என்னும் தவறான முடிவை உடனே எடுத்து விடுகின்றனர்.

இரண்டாவதாக, தண்ணீரிலிருந்து, பலசரக்கு சாமான் வரை அனைத்திற்கும் நீண்ட வரிசை இருந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் அமைதியாக வரிசையில் நின்று தங்கள் முறை வரும் வரை காத்திருந்து பொருட்களை பெற்றுக்கொண்டிருந்திருக்கின்றனர். வசைச் சொற்களோ , தள்ளுமுள்ளோ ஏற்படவே இல்லை. நம் ஊரில் இது போன்ற ஒழுங்கை எதிர்பார்க்க முடியுமா? இதைச் சொல்லும் போது மற்ற ஒரு விஷயத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. பல கடைகள் தங்களிடம் இருப்பிலிருந்த பொருட்களை விற்பதற்காக கடையைத் திறந்து வைத்திருந்தனவாம். அது மட்டுமல்ல, விலைகளையும் ஒன்றுக்குப் பாதியாக குறைத்திருக்கின்றன.

நம் ஊர் கடைக்காரர்கள் அப்போதுதான் கிடைத்த வரை லாபம் என்று விலையை உயர்த்தி, லாபம் சம்பாதிக்கப் பார்ப்பார்கள். எரியும் வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் என்னும் மனப்பான்மைதான் காரணம். கடைக்காரர்களை மட்டும் சொல்வானேன், அது போன்ற சந்தர்ப்பங்களில் திறந்திருக்கும் கடைகளை, கடைக்காரரை அடித்துப் போட்டுவிட்டு, இருக்கும் பொருட்களை சுருட்டிக்கொண்டு ஓடுவதும் நம் நாட்டில் நடக்கத்தானே செய்கிறது.

மூன்றாவதாக கட்டடங்களின் நம்பகத்தன்மை. கட்டடங்கள் நில நடுக்கத்தாலும், ஆழிப் பேரலை(சுனாமி)யாலும் ஆட்டம் கண்டனவே தவிர இடிந்து விடவில்லை. அப்படியானால் கட்டடக் கலை வல்லுனர்கள் அத்தனை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள் என்று பொருள். அது மட்டுமல்ல கட்டுமானப் பொருட்களின் தரத்தில் எந்த விதத்திலும் அவர்கள் விலை போகவில்லை என்றும் பொருள். நம் நாட்டுக் கட்டடக் கலை வல்லுனர்கள் என்ன திறமையில் குறைந்தவர்களா? அப்படியெல்லாம் நிச்சயமாகக் கிடையாது. வடிவமைப்பில் சிறந்து விளங்கினாலும், கட்டும் போது தனக்கு என்ன இலாபம் கிடக்கும் என்று சிந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அரசு கட்டும் கட்டடமானால் அந்தத் துறை சார்ந்த அமைச்சரிலிருந்து, பியூன் வரை எல்லோருக்கும் பங்கு உண்டே? கொடுக்காமலிருக்க முடியுமா?

Japanese queue

மூன்றாவதாக மக்கள் தங்களுக்கு தற்போதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வாங்கினார்கள். அதனால் செயற்கையான தட்டுப்பாடு ஏற்படாமல் இருந்தது. இதைச் சொல்லும் போது ஒரிஸ்ஸாவில் 1999இல் சூப்பர் சைக்ளோன் வந்த அந்த சமயம், எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நாங்கள் அந்த சமயத்தில் புவனேஸ்வரில்தான் இருந்தோம். சுழற்காற்று நின்று, வெளியில் வரும் நிலை ஏற்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. மக்கள் நாளையும் இனி வரும் நாள் எல்லாம் தினமும் சுழற்காற்று வீசப் போகிறது என்று நினைத்தார்களோ, என்னவோ? எல்லாப் பொருட்களையும் 3 கிலோ, 4 கிலோ என்று வாங்கித் தள்ளி விட்டார்கள். மிக்சரையே ஒருவர் 5 கிலோ வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதனால் கையிருப்புத் தீர்ந்ததும் கடைகள் மூடப்பட்டன. பின்னால் வந்த பலருக்கும் ஏழை மக்களுக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது வேதனையான விஷயம். நம் மனப் போக்கு இப்படி சுயநலத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இப்படியெல்லாம் செய்பவர்கள் படித்தவர்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

அவை தவிர மக்களின் நேர்மையை எடுத்துக் காட்டும் விதமாக ஆளற்ற ஒரு ATM சீந்துவாரின்றிக் கிடந்ததாம். நம் நாட்டில் சாதாரண நாட்களிலேயே ATM உடைத்துத் திருடுகிறார்கள். தாக்குண்ட அந்த இடங்கள், போக்குவரத்து நெரிசல்களோ, வீதியில் குழப்பங்களோ, வன்முறைக் கும்பல்களோ எதுவுமே இல்லாமல் எல்லாம் அமைதியாக இருந்திருக்கிறது. குழந்தையிலிருந்து வயதான பெரியவர் வரை எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ, அப்படி பக்குவமாக நடந்துகொண்டிருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் மின்சாரம் திடீரென நின்றபோது உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் எடுத்த பொருட்களை அந்தந்த இடத்திலேயே வைத்துவிட்டு,  அமைதியாக வெளியேறி இருக்கிறார்கள். என்ன ஒரு நேர்மை? என்ன ஒரு சுய கட்டுப்பாடு? இவற்றையெல்லாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.

இதைப் பற்றி சொல்லி வரும்போது எங்கள் ஊரில் நிலவி வரும் பழங்கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு அரசன் இருந்திருக்கிறான். அவன் கோவில் ஒன்றைக் கட்டிவிட்டு, பூஜை நடக்கும் முதல் நாளில் அந்த ஊரில் இருக்கும் மக்கள் அனைவரும் தத்தம் வீடுகளிருந்து ஒரு செம்பு பால் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறான். ஊரின் நடுவில் ஒரு பெரிய பானையையும் வைத்திருக்கிறான். உச்சிப் பொழுதில் அபிஷேக நேரத்தில் பானையைத் திறந்து பார்த்தால் ஒரு சொட்டு பால் கூட இல்லை பதிலாகத் தண்ணீர்தான் நிறைந்திருந்தது.

இது எப்படி நிகழ்ந்தது? எல்லாருடைய எண்ணமும் ஒன்றாக இருந்ததுதான் காரணம். புரியவில்லையா? எல்லோரும் தான் பால் ஊற்றியிருப்பர்களே அதில் நாம் ஒரு செம்பு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது என்று அனைவரும் நினைத்ததுதான் அரசன் வைத்த பெரிய பானையில் தண்ணீர் நிறைந்திருக்கக் காரணம். இந்தக் கதை, நம்முடைய தனி மனித ஒழுக்கத்தைக் கேலி செய்கிறது.

தனி மனித ஒழுக்கம் மட்டுமல்ல நம்முடைய ஊடகங்களின் ஒழுக்கமும் அத்தனை சிலாக்கியமானதாக இல்லை. எல்லாக் கட்சிகளும் தனக்கென்று ஒரு சேனல் வைத்திருக்கின்றன. ஏதேனும் துர்நிகழ்வு நடந்தால் ஆளும்கட்சியின் சேனலில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அரசு ஒரு தேவ தூதன் போல் மக்களை அரவணைப்பதாகவும் செய்திகள் வரும், அதற்கேற்ற காட்சிகளும் இடம் பெறும். எதிர்க் கட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு நாசக்கார சம்பவங்களையும் அடிதடிகளையும் தேடிப் பிடித்துக் காட்டி, மொத்தத்தில் அந்த துர்சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் ஏதோ ஒரு கொந்தளிப்பில் இருப்பது போன்ற நிலையை உருவாக்கும். ஆக உண்மையான நிலை எது? பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான தேவை என்ன? என்பது போன்ற விஷயங்கள் வெளியில் வராமல் அமுங்கி விடும்.

ஜப்பான் ஊடகங்கள் இதிலும் தங்களுடைய ஒற்றுமையை நிரூபித்திருக்கின்றன. செயற்கையான இடைச்செருகல்களோ, உணர்ச்சியைத் தூண்டும் பேட்டிகளோ இல்லை. இயற்கையின் சீற்றத்துக்குக் கூட ஆளுங்கட்சியினரே காரணம் என்று சொல்லும் மூடத்தனம் இல்லை. என்ன நடக்கிறதோ அதை அப்படியே காட்டியிருக்கிறார்கள். ஊடகங்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து அதைச் சிறப்பாகச் செய்திருக்கின்றன.

இது போன்ற ஒரு ஒழுக்கமும் கட்டுப்படும் நிறைந்த நிலை, நம் நாட்டிலும் வருமா? இங்குதான் தனி மனித ஒழுக்கங்கள் பற்றியும் பண்பாடு நாகரீகம் பற்றியும் மிக அதிகமாகப் பேசப்படுகிறது , விவாதிக்கப்படுகிறது. உலக நாகரிகத்திலேயே தலை சிறந்தது என்று நாம் நம் இந்தியக் கலாசாரத்தையும் நாகரிகத்தையும் சொல்லிக்கொள்கிறோம். நம்மைப் பொறுத்தவரை கலாசாரம் என்பது வெறும் உடையோடு நின்றுவிட்டது. உடையைத் தாண்டி நம் உள்ளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மன வலிமையும் கட்டுப்பாடும் ஒவ்வொரு மனிதனின் பழக்கமாக வேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான முன்னேற்றம் கண்டவர்களாவோம்.

பிறரைக் குறை கூறுவதை விட்டுவிட்டு, முதலில் நாம் மாற வேண்டும். நம்மைப் பார்த்து ஒரு சிலரேனும் மாற வாய்ப்பிருக்கிறது. ” நன்மையும் அறிவும் எத்திசைத்தெனினும் யாவரே காட்டினும் தழுவி வாழ்வீராயின் அச்சமொன்றில்லை” என்று பாரதி கூறியதைப் போல, மற்ற நாட்டவர்களின் நல்ல பண்புகளை நாம் திறந்த மனத்துடன் ஒப்புக்கொண்டு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நல்ல பண்புகளை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனமும் தனி மனித ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட சமுதாயம், எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நிலவொளியில் ஒரு குளியல்.

(மேலும் நனைவோம்…

தொடர்புள்ள இடுகைகள்:

======================================

படத்திற்கு நன்றி: http://www.peppersoriano.com

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நிலவொளியில் ஒரு குளியல் – 22

  1. Very nice article. Even though one may feel sad, one needs to be disciplined and brave. We should have self-control and also be understanding especially during the times of natural calamities. Thank you mam for choosing such an important topic.

  2. We have to learn many good habits from Japan; Even in this situation, people are behaving in a very calm and matured manner; The main problem with the Indians is that we become panic in case of any mishappenings; We all work in individual directions rather than working in collective pockets; Same time people have to be honest and respect others sentiments;

  3. i agree with you as well as chellappa….from whatever documentaries and news footage we have seen about the incident and its aftermath, there was no panic in their faces and whatever interviews i had seen of that, people are very calm and matured and they are willing to deal with the situation in a professional way…

    Alas…probably the only country which believes that hardwork is the only way to success has been brutally dealt by God…

  4. What Mami Said is absoultely right. If the same condition is happened in India, We immediately, use to panic and due to tension, we will make the total situation is as tensed one. Immediately, we use to find away to dump all the available material as much as possible. These things we haveto learn from Japan. No doubt, they willcome up and retain the present position with in a short span of time. If, In India, with the help of national calamity, we go backward for atleast 40-50 years.

    Really wonderful article and wonder ful Japan Nationals

    Thanks and Regards.

    K. Ramesh

  5. Really, I like this article very much madam. Now only I came to know about hardwork, sincere, punctuality, helping tendency from Japanese . Each and every Indian should learn from Japanese.

    Great Japan

    thank you

    Trichy Sridharan

  6. அரசியல்வாதியாக இளைஞர்கள், படித்தவர்கள், நல்ல பண்புகளை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனம் உடையவர்கள் வந்தால் கட்டுப்பாடு கொண்ட சமுதாயம் எதிர்காலத்தில் உருவாகும்.

  7. Think, still Japan believes that only hard work can restore their country to the old position and not just by simply believing in god and things would fall in place. I dont have even a slight doubt about their resurgence. They are going to bounce back soon. Good article once again. Thanks.

  8. Ideal mind is Devils workshop Japanese always work hard and never be ideal so don’t have time to think for illegal activity.
    In India Politicians needs blind followers( Whatever he did corruption they need their supporter to support them ) hence they announce free scheme and make people ideal they want their supporter simply support them irrespective of their corruption.

    There is no doubt our Indian culture is great. I had read one mail a year back but I don’t remember the exact name but I can remember the theme.
    Before British people arrive to India, one British government higher official visited our India, and he wrote a letter to his government, in which he explained about Indian wealthy and disciplinary activity and literacy of Indian people. In that letter he wrote, it is very difficult to beat India unless we do any trick.
    From this letter we came to know the culture of our ancient Indian people.
    Child hood onwards we spread Jealous by comparing our children with other’s. Thus Jealous starts growing in our children’s mind. We have to tell our children about humanity and good manner .
    Japan is under critical zone so they construct building to withstand earthquake. Since our country is not under critical zone, we are not consulting Engineers for design, instead we consult mason
    Now only people have awareness about earthquake resistance building. In cities newly constructed building are designed their foundation to withstand earthquake.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.