காந்தியின் மடல்
ஷைலஜா
மகாத்மாகாந்திக்கு ஒருசகோதரி இருந்தார். அவர் பெயர் கோகிபஹன். அவர் ஒரு விதவை. அவருடைய வாழ்க்கைச் செலவுக்காக மாதம் பத்துரூபாய் அனுப்பி வைக்கும்படி நண்பர் பிராண ஜீவன் மேத்தாவைக் கேட்டுக் கொண்டர் மகாத்மா. அவரும் அனுப்பினார்.
சில மாதங்களில் கோகிபஹனின் மகளும் விதவையாகி தாயிடம்வந்து சேர்ந்தார். இருவருக்கும் பத்துரூபாய் போதவில்லை. “அணடை அயலில் மாவரைத்துக்கொடுத்துச் செலவை சரிக்கட்ட வேண்டி இருக்கிறது. கொஞ்சம் கூடுதலாகப் பணம் அனுப்பினால் நல்லது” என்று கோகிபஹன் அண்ணலுக்குக் கடிதம் வரைந்தார்.
“மாவு அரைப்பது நல்லதுதான்.அதனால் உடல்நலம் பெருகும், நாங்களும் ஆசிரமத்தில் மாவரைக்கிறோம். நீங்கள் விரும்பினால் இங்குவந்து தொண்டு செய்யலாம். பணம் அனுப்பும் நிலையில் நான் இல்லை. நண்பர்களிடம் அனுப்பச் சொல்ல இயலாது” என்று பதில் வந்தது காந்தியிடமிருந்து.