Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்

மார்ச் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

வெங்கட் சாமிநாதன்

இந்த முறை கதைகளின் வருகை குறைந்திருந்தாலும் நல்ல எழுத்தின் சதமானம் பெருகியுள்ளது என்பதோடு சில புதிய கைகளும் தென்படுகின்றன். ஒரு வேளை நான் மறதியில் புதிய கை என்கிறேனோ என்னவோ.

இம்முறை எனக்கு மூன்று கதைகள் குறிப்பிடத் தக்கனவாகப் படுகின்றன. இரண்டு பழைய கைகள்.  மாதவன் இளங்கோவின் “அமைதியின் சத்தம்”. அயல் நாட்டு வாழ்வின் சிக்கல்கள். கதை முழுதும் கடைசி வரை ஒரு அயல் நாட்டின் கலாச்சார மேலாதிக்கத்தின் அகங்காரம் எனத் தோன்றினாலும் கடைசியில் அங்கும் மனித வாழ்வின் அவலங்கள் வேதனைகள் சில நமக்குக் கடைசி வரை புரியாமலேயே போகின்றன. எல்லா இடத்திலும் நாடுகளிலும் கலாச்சாரங்களிலும் மனிதம் இல்லாமல் போய்விடுவதைல்லை.

அதே மனிதப்பண்புகள் தான் மில்லியன் டாலர்கள் கணக்கில் நஷ்டப்பட்டாலும் மனித உயிரின் பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு.சரி இப்படித்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா எங்கிலும் என்பது தெரியவில்லை. இருப்பினும் அது இன்னமும் உயிர்த்திருபபது காணும் ஒரு இடத்தையாவது காண முடிகிறதே. பழமை பேசியின் ”ககனமார்க்கம்”.கதையில். தன் ஒவ்வொரு கதையிலும் வாழ்க்கையின் வெவ்வேறு அனுபவங்களை நம் முன் மிகத்திறமையுடன் வைக்கிறார் பழமை பேசி.

கடைசியாக எனக்குப் புதியவராகத் தோன்றும் பார்வதி ராமச்சந்திரனின் “நம்மில் ஒருவர்” இம்மாதத்திய பரிசுக்குகந்த கதையாகச் சொல்லத் தோன்றுகிறது. புதிய எழுத்தாகவே தோன்றவில்லை. பழகிய கை மாதிரிதான் இருக்கிறது எழுத்தின் தேர்ச்சி. அந்தச் சூழலின் சித்திரம்.

பரிசுக்குரிய கதையாக பார்வதி ராமச்சந்திரனின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

அதே சமயம் முடிவில் இந்த வருடத்திற்கான சிறந்த கதைத் தேர்வின் போது, மாதவன் இளங்கோவின் அமைதியின் சத்தம், பழமை பேசியின் ககனமார்க்கம் கதைகளையும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். அவை முன்னரே பரிசு பெற்ற கதைகள் மாத்திரமலல, இக்கதைகளும் சேர்த்துக்கொள்ளலாம்.

பார்வதி ராமச்சந்திரனுக்கு என் பாராட்டுக்கள்.

இந்த மாதப் போட்டியில் பங்குபெற்ற சிறுகதைகளின் விவரம் வருமாறு:

மறுபடியும் ஒருமுறை

நம்மில் ஒருவர்….

அமைதியின் சத்தம்

பதில்??

முத்தம்

நவீன ரோபோக்கள் “

ககனமார்க்கம்

சாய்ந்து சாய்ந்து… அவள் பார்த்த போது …

உண்மைக்காதல்

தாமரை நெஞ்சம்

பயம் “

எழுச்சி

பரிசு பெற்ற திருமிகு பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திரு பழமைபேசி மற்றும் மாதவன் இளங்கோ இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து அனைவரும் பங்கு பெற்று பரிசு பெறவும் வாழ்த்துக்கள்.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (10)

 1. Avatar

  திருமிகு பார்வதி இராமச்சந்திரன், பொள்ளாச்சியில் குதூகலிக்கும் மாதவன் இளங்கோ, வல்லமை ஆசிரியர் குழு, பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும்!!

 2. Avatar

  சிறந்த கதாசிரியராக தேர்ந்தெடுக்கப் பட்ட பார்வதிக்கும், மீண்டும் தங்கள் எழுத்தின் வல்லமையை நிரூபித்த பழமை பேசிக்கும், இளங்கோவிற்கும் வாழ்த்துக்கள்.  
  அன்புடன் 
  ….. தேமொழி 

 3. Avatar

  பார்வதி, மாதவன், மற்றும் பழமைபேசி அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

 4. Avatar

  சிறந்த கதையைப் படைத்துப் பரிசுவென்ற திருமதி. பார்வதி இராமச்சந்திரனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
  தொடர்ந்து சிறந்த கதைகளை அளித்துவரும் திரு. பழமைபேசி, திரு. மாதவன் இளங்கோ ஆகியோருக்கும், ஊக்கத்தோடு கதைகள் எழுதிவரும் ஏனைய படைப்பாளர்கட்கும் என் பாராட்டுக்கள்.

  ..மேகலா

 5. Avatar

  திருமதி.பார்வதி இராமச்சந்திரன், திரு பழமைபேசி, மற்றும் திரு.இளங்கோ ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 6. Avatar

  ‘நம்மில் ஒருவர்’ சிறுகதையைப் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியமைக்கு,  பெருமதிப்பிற்குரிய திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும், வல்லமை மின்னிதழுக்கும்  என் சிரம் தாழ்ந்த‌ நன்றிகள்.தாங்கள் அளித்துள்ள பரிசு என் எழுத்துக்களுக்குக் கிடைத்துள்ள பெரும் உத்வேகம். மிகப்பெரிய கௌரவம்.  

  என் போன்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வல்லமை மின்னிதழுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.

  அன்புச் சகோதரர்கள்  மதிப்பிற்குரிய திரு. மாதவன் இளங்கோ அவர்கள், திரு.பழமைபேசி அவர்களுக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த, திரு.பழமைபேசி அவர்கள், திருமதி.தேமொழி அவர்கள், திருமதி.கவிநயா அவர்கள், திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்கள், திரு.சச்சிதானந்தம் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 

 7. Avatar

  இந்த மாதம் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, கதாசிரியர் திருமதி பார்வதி இராமச்சந்திரனுக்கும், தேர்வு செய்த திரு வெ.சா மற்றும் கருத்துப் பதிவு செய்து கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.  இதே கருத்துப் பதிவுதான், ஒவ்வொரு காதாசிரியரையும் மேன்மேலும் எழுதத் தூண்டுகிறது. தான் எழுதுவதைப் படிப்பதைவிட, பிறரிடமிருந்து, தன்னுடைய எழுத்துக்களுக்கு வரும் விமர்சனங்களே நம்மை அதிகமாகக் கவர்ந்து விடுகிறது. 

 8. Avatar

  முதல் பந்திலேயே சிக்சர் அடித்து சிறந்த கதாசிரியை விருது பெற்ற மதிப்பிற்குறிய பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பழமை பேசி, மாதவன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

 9. Avatar

  பழமைபேசி அவர்கள் கூறியது போல இந்தியாவில் விடுமுறையில் குதூகலித்துக் கொண்டிருந்த நான் நண்பன் சச்சிதானந்தம் மூலம் இச்செய்தி அறிந்தேன்.

  ‘நம்மில் ஒருவர்’ கதைக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும் / கிடைக்கவேண்டும் என நான் விரும்பியது போல் நடந்துள்ளது. மதிப்பிற்குரிய திரு. வெ.சா அவர்கள் கூறியுள்ளது போல புதிய எழுத்தாகவே எனக்கும் தெரியவில்லை. இந்தச் சிறுகதையை படைத்ததற்கும், தொடர்ந்து எழுதவும், வல்லமை பெறவும் சகோதரி திருமதி.பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

  ககனமார்க்கி பழமைபேசி அவர்களுக்கும், போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் என் வாழ்த்துகள்!

  வாழ்த்து தெரிவித்த அனைத்து நன்னெஞ்சங்களுக்கும், வல்லமை குழுவுக்கும், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தப் பணியேற்றுள்ள திரு. வெ.சா அவர்களுக்கும் என் நன்றிகள்.

 10. Avatar

  அன்புச் சகோதரர்கள், திரு. பெருவை பார்த்தசாரதி, திரு.தனுசு. திரு.மாதவன் இளங்கோ ஆகியோரது  வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல.  என் எழுதும் ஆர்வம், தங்களது பாராட்டுக்களால் மேன்மேலும் பலப்படுகிறது. மிக்க நன்றி. 

Comment here