கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 2

 

கோ.ஆலாசியம்

 

val4

சிலிர்த்த மணித்துளிகள்

அதைக்

களித்த பொழுதில்

வலைவீசிப் பிடித்தேன்

வண்ணப் படம் ஒன்றை.

 

அழகாய் கவர்ந்த சிப்பியை

அலகால் தாங்கியே

அதனுள் இருக்கும் பூச்சியை

அமுதமாக்க….

 

val5

அந்தோ!…

அருகில் இருந்த பாறையில்

அப்படியே வீழ்த்திய

அறிவினை எண்ணி

அதிசயித்துப் போனேன்

 

அதை அருகிலே நின்று

அண்ணாந்து பார்க்கும்

அருமை நண்பனும்

லொள்! லொள்! லொள்ளென்று

குரைத்து…

 

ஆமாம், நானும் தான்

என்று

நயமாக கூறினான்…

 

ரம்மியமானக் காட்சியதை

ரசிக்கும் போதே

ரகசியமாக

எனது கருவிக்குள்

அனுப்பிடவும்

மறக்கவில்லை நான்.

 

தாமதிக்க வில்லை

தாமாக நடந்த

எனது கால்களின் போக்கை…

 

தாமாகப் புரிந்து கொண்டு

ஆமோதிப்பவனாய்

அருகிலேய

அவனும் வந்தான்…

 

வேறு யாரு

நம்மப் பைரவன் தான்….

 

தகரம் அங்கே

தாமிரமானது..

ததும்பி பெருகிய

மலைத்தேனைப் போன்று

 

நினைவா…

கனவா…

கண்ணைக் கவரும்

வண்ணங்கள்

வகை வகையாக

வானில் வந்துக்

கொட்டிக் கிடக்கின்றனவே…

val6

என்ற எண்ணமேவ

என்னெதிரில் பறந்த

பறவைகளையும் படமெடுத்தேன்…

 

ஆகா, இன்னொன்றை

இங்கே கூற மறந்தேன்

வெள்ளியை படமெடுக்க

விரைந்து வந்த பொழுது

 

இன்னும் எத்தனை

நேரமாகுமோ

இந்தச் சூரியன் மறைய

என்றிருந்த அப்பொழுதில்….

 

நான் நிற்கும்

இப்பாலத்தை

நல்லதொரு படமு மெடுத்தென்.

 

(தொடரும்)

3 thoughts on “கே.ஜெ வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும் – 2

  1. இந்தப்படங்கள் கவிதையோடு அப்படி ஒத்து போகிறது. படங்களை தேர்ந்தெடுத்து கவிதை எழுதுகிறீர்களா, அல்லது கவிதைக்காக படங்களை தேர்ந்தெடுக்கிறீர்களா.

  2. அருமை. அழகான சொற்களால் கவிதைகளைப் படைத்திருக்கிறீர்கள். மிக இயல்பாக நகருகிறது கவிதை. வாழ்த்துக்கள்.

  3. @கவிஞர்கள் தனுசு மற்றும் சச்சிதானந்தம் அவர்கள் இருவருக்கும் நன்றி!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க