வேண்டாம் உன் நட்பு
என் இனிய சிநேகிதியே ,
நீயா ? எனக்கு ..இப்படி?
உன்னை மார்பில் அணைத்தேனே !
இனிய சுகத்தைத் தந்தாயே ,
உதடுடன் உன்னை இணைத்தேனே!
இனிய ரசத்தைக் கொடுத்தாயே ,
மாலையில் சந்தித்த நான்,
திரும்பப் பார்க்கும் எக்கம் ,
அடுத்தடுத்து ஏற்பட
காலையிலும் இணைந்தேனே ,
உன் நட்பு எனக்கு பெரிது ,
உன்னை நான் விரும்ப ,
என்னை நீ விடாமல் பிடிக்க
சுவர்க்கத்தில் மிதந்தேன் ,
உன்னால் பல நட்பு போனது ,
காலால் உதைப்பட்ட மனைவி
கர்ப்பம் கலைந்து நின்றாள் ,
என்னை விட்டுப் போனாள்
பின்னும் நீதான் எனக்கு
என்றும் துணை நின்றாய்
சோகமா நீ கைக் கொடுத்தாய் ,
தனிமையா, ஓடி வந்தாய் ,
கோபமா ?என் கூட நின்றாய் ,
சிநேகிதியாக நடித்து
ஏன் இன்று துரோகியானாய்! ,
நிம்மதிக் கொடுப்பதுப் போல்
என் நிம்மதியை கெடுத்தாயே ,
இன்று ஆஸ்பத்திரியில் நான்
இது நீ கொடுத்தப் பரிசு ,
கல்லீரலில் புற்று நோய்
இதோ உன்னைத் தூக்கி எறிகின்றேன் ,
வேண்டாம் உன் சகவாசம் ,
நட்பாக நடித்து
என் உயிருகே உலையா?
ஏ மதுப்புட்டியே, விஸ்கியே
ஒழிந்து போ !
இன்னும் சிறிது காலம் தான் வாழ்வு
உன்னால் வந்தது இந்தத் தாழ்வு
கண்கெட்டப்பின் சூரிய நம்ஸ்காரம்
இனி உன் திக்கிற்கும் ஒரு நமஸ்காரம்
பின் குறிப்பு புற்றுநோயினால் உயிருக்கு மனறாடும் ஒருவரைப்பற்றி
என் தோழி சொல்ல அதனால் எழுதப்பட்டது இந்தக்கவிதை என் இனிய சிநேகிதியே ,