உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ
கவிஞர் காவிரி மைந்தன்
1970ல் வெளிவந்த நவக்கிரகம் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்! வி.குமார் இசையில் சிவக்குமார் லட்சுமி திரையில் தோன்றும் பாடல்!
கவிஞர் வாலியின் கற்பனையில் இசையின் இணை பக்க பலமாய் அமைந்திட பருவகாலக் காற்றுபோல இந்தப் பாடல் நம் மனதில் இடம் பிடித்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
பாடலின் பல்லவியில் உள்ள கவித்துவம் பாடல் முழுவதும் நிறைந்திருக்க.. காதலின்துடிப்பை ஒவ்வொரு வரியும் சொல்லிமகிழ..
பூத்துக்குலுங்கும் ரோஜாச் செடிபோல் துளிர்விட்டு.. கிளைவிட்டு.. மலர்விட்டு வளரும் காதலின் சுகங்கள் கோடியன்றோ?
இயற்கையாய் நடக்கும் மழைத்துளி
.. சாரல்.. இவற்றையெல்லாம் தனக்கேற்றவாறு கவிஞர் பாடலுக்குள் பிடித்துவர.. அலைகள்கூட இவர்களை இணைக்கப் பாலமிட்ட கதையையும் சொல்கிறார் பாருங்கள்!
அலைமோதும் எண்ணங்களில் இளங்கிளிகள் பருவப் பாடத்தை பயின்றுகொண்டிருக்க.. பெண்ணுக்கே பெருமை சேர்க்கும் நாணம் இங்கே என்ன செய்கிறது பாருங்கள்..
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது
இந்த கற்பனை வளம் மிக்க கவிஞர்களுக்கே கைவரும்! கவிஞர் வாலியின்கைவண்ணம் அக்கற்பனையை கொடிகட்டிப்பறக்கவிடுகிறது இங்கேதான்!
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டதோ
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டதோ
வரலாம்.. தொடலாம் மணநாள் வரும்போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது..
உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது
நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது
மழைத்தூரல்போட்டு சாரல்வந்து உன்னை நனைத்தது – அது
உன்னை நனைத்து தெறித்தபோது என்னை நனைத்தது
அது துளித்துளியாய் எனது தோளில் இடம்பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்க்குது!
http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds
http://www.youtube.com/watch?v=zBj3r9Xweds