திருமால் திருப்புகழ்

திருமால் திருப்புகழ் (28)

கிரேசி மோகன்

800px-Darasuram_lord_Shiva_and_Parvathi_on_Bull
தந்த தத்த தானதா னனா
தந்த தத்த தானதா னனா
தந்த தத்த தானதா னனா-தனதான….

———————————————————————————————
“எங்கு துச்சம் தூய்மையா குதோ 10006373_503143549790679_58366536_n
எங்கு மிச்சம் பூர்ணமா குதோ
எங்கு பிக்‌ஷை சேரஆ குதோ -பிரசாதம்;
எங்கு சுத்தம் சோறுபோ டுதோ
எங்கு பித்தம் ஆலவா யனார்
நெஞ்சின் நச்சு பாகமா குதோ -அதனாலே
எங்கு சித்தம் ஏகமா குதோ
எங்கு சத்தம் கீதையா குதோ
எங்கு பக்தி யோகமா குதோ -அதைநாட
பொங்கு வெற்பு சோணைமீ திலே
தங்கி சுத்த நானில்மூழ் கியே
நின்ற நிட்டை ஞானநா யனார் -ரமணேசர்
முங்கு புத்த வாவிவா சனாய்
இங்கி ருக்க காளைவா கனார்
பங்கு சக்தி சோதரா விடா -தருள்வாயே
சங்கு சக்ர வாளும்கோ லுமாய்
அம்பு விற்கை ஆளும்மா லனே
பொன்பு விக்கு மாதுசே ரவே -புளிலேறி
இங்கெ னக்கு யாவுமா கநீ,
என்ப தைப்பு ஓயவே கமாய்
மண்ப றித்த ஏனரூ பனே-வருவாயே
வெஞ்சி றைக்குள் வாசுதே வனாய்
வந்து தித்து வாழஆ யனாய்
மண்கு தித்த நீலமே கமே -பெருமாளே”
—————————————————————————————————————————–

படத்திற்கு நன்றி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Darasuram_lord_Shiva_and_Parvathi_on_Bull.JPG

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க