பொங்கும் கடலோசை – கவிஞர் வாலி
கவிஞர் காவிரி மைந்தன்
பொங்கும் கடலோசை..
கேளுங்கள் அன்பர்களே!
ஒரு பாடல் நம்மை அழைக்கிறது! தேவசுகம் தருகிறது! நாயகன் மனதளவில் சரிந்திருக்கும் நேரத்திலே நாயகி துணைவருகிறாள்! அவனை தூக்கிநிறுத்துகிறாள்! அவன் நெஞ்சம்நோக்கி ஒரு பச்சைக்கிளி பாட்டுப் பண் இசைக்கிறது! ஓ.. அந்த அழைப்பில்தான் எத்தனை உற்சாகம் ஊற்றெடுக்கிறது?
ஜலதரங்கம் கலகலக்கத் தொடக்கம் பெறும் பாடலிது! அலைகளிடையே இசை ஒன்று உருவானால் அது எப்படிப் பேசுமோ.. அப்படிப் பேச வைத்திருக்கிறார்.. மெல்லிசை மன்னர் ம.சு.விஸ்வநாதன்.. மக்கள் திலகம் ம.கோ.இராமச்சந்திரனுடன் லதா திரையில் தோன்ற.. இயக்கியிருக்கிறார் ஸ்ரீதர் மீனவ நண்பனுக்காக!
கவிதை வரிகளை காற்றலையில் தவழவிடும் வித்தை அறிந்த கவிஞர் வாலியின் வார்த்தை முத்துக்கள்! அலைகளையேக் கடந்து வந்தால்தான் அமைதியான பயணம் வரும்! அன்புடனே அழைப்பு என்றால் அங்கேதான் காதல்வரும்!
இத்தனை அற்புதக் கூட்டணியில் தானும் சேர்ந்து நாத லயத்தைத்தான் வழங்கியிருப்பவர் திருமதி.வாணி ஜெயராம்! துள்ளியெழும் வேகத்தை நம் உள்ளம்பெற வைக்கும் ஓர் இன்பப்பாடல்!
அழகிய ஒளிப்பதிவுடன் அருமையாக திரையில் வந்த காதல் விருந்து! உள்ளம் துவண்டுவிழும் நேரத்தில் உங்கள் காதுகளில் விழுந்தால்.. மெல்லிசை மன்னர் இசையுடன் வீசிடும் கவிதை சாமரம்!
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ –
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மலை காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை… மேடையில்… மீனவன் …
நாடகம் நடிப்பதும் ஏனோ
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பொங்கும் கடலோசை
கொஞ்சும் தமிழோசை
ஓ நிறைய தடவை மெய் மறந்து ரசித்த பாடல். பகிர்வுக்கு நன்றி. கவிதை வரிகள், பாட்டின் ராகம், வாணி ஜயராமின் இழை, ஜப்பான் ஜலதரங்கம் ,குழலின் இழைவு ,ஆடல் இல்லாத படத் தொகுப்பு….பஹூத் அச்சா ! “பொங்கும் கடலோசை
யை நான் கூட “சிரிக்கும் கடலோசை”என்று பள்ளி நண்பர்களுக்கு பாடிகாட்டுவேன். கடல் பொங்கினால்
கொதிக்கும் அல்லது சுனாமியாக விழுங்கும் என்பதால்…