பட்டுக்கோட்டையாரின் வாரிசு பாடல் எழுதும் – ‘ஒத்தவீடு’
‘விஷ்ஷிங் வெல்’ புரொடக்ஷன்ஸ் சார்பில் தேவ்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘ஒத்தவீடு’.
இந்தப் படத்தில் புதுமுகம் திலீப்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஜானவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, சுப்புராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பாலு மலர்வண்ணன். ரஞ்சன் ராவ் ஒளிப்பதிவு செய்ய, வீ. தஷி இசையமைக்கிறார்.
இப்படத்தில் இடம் பெறும் ஆறு பாடல்களில், ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அண்ணன் மகன், பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம் எழுதுகிறார். மற்றப் பாடல்களை கவிஞர் ராஜராஜன், தானு கார்த்திக், சிங்கப்பூர் சொ.சிவக்குமார், இனியதாசன், விஜய்கிருஷ்ணா ஆகியோர் எழுதுகின்றனர்.
பேய், பிசாசு பற்றி நாம் சிந்திப்பதால் நமக்கு ஏற்படுவது அச்சமும், மனநோயும்தான் என்ற கருவை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரம் அருகே உள்ள வில்லிவலம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர், சங்கேந்தி போன்ற கிராமங்களில் நடைபெறுகிறது.
இப்படத்திற்கு கலை: சி.சண்முகம், படத்தொகுப்பு: எம்.சங்கர்-இத்ரிஸ், நடனம்: ரமேஷ்ரெட்டி, சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை: அண்ணாமலை.
இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து ஒரே கட்டமாக நடைபெறுகிறது.