நான் ஏன் பிறந்தேன்!!!
–கவிஞர் காவிரிமைந்தன்.
நான் ஏன் பிறந்தேன்!!!
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்
கவிஞர் வாலி அவர்கள் இயற்றி மக்கள் திலகம் நடித்து வெளியான பாடல்கள் என்பதா? மக்கள் திலகத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல்கள் என்பதா? இந்தக் கலவை தந்திருக்கும் முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன தமிழ்த்திரைசையில்! நான் ஏன் பிறந்தேன்… என்கிற திரைப்படத்தில் இடம் பெரும் இனிய பாடலிது! கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் இசையமைப்பில் உருவான பாடல்கள் என்றும் நம் இதயம் தொடுகின்றன!
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
முன்னோர் சொன்ன சொல்லே ஆனாலும் எளிய தமிழில் வினாக்களாய் நம் நெஞ்சில் பதிக்கிறார். மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி தான் பதவி ஏற்றக் கூட்டத்தில் “Ask not what your country had done for you; Ask what you have doe for the country” என்ற பொன்மொழியின் பிரதிபலிப்பாக இப்பாடல் திகழ்கிறது!
பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்
இந்த வைர வரிகள் என்னையும் கூட வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி வெற்றி பெற வைத்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை! அந்த நன்றிக் கடனாக “வாழும் தமிழே வாலி” என்கிற நூலை கவிஞர் வாலிக்கு நன்றி காணிக்கையாக எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிட்டேன்.. பாடலாசிரியன் என்கிற தகுதியோடு திரையுலகில் பாட்டு எழுதிச் சென்றவர் பலர் இருக்கலாம்! அதே பாடல்கள் மக்கள் நெஞ்சில் குடியிருக்கச் செய்தவரைத்தான் ‘கவிஞர்’ என்கிற வரிசையில் கொள்கிறோம். மேலும் அதிலும் மானுட வாழ்விற்கான தேவைகளைக் கருத்துக்களை வழங்கிய கவிஞர்களையே காலம் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.
http://youtu.be/m_d5bAbO0fM
காணொளி: -http://youtu.be/m_d5bAbO0fM
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு

உடனே செயல்படு என் தோழாமலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது
மலையில் பிறந்த நதியால் மக்கள் தாகம் தீர்ந்தது
மரத்தில் பிறந்த கனியால் அவர் பசியும் தணிந்தது
கொடியில் பிறந்த மலரால் எங்கும் வாசம் தவழ்ந்தது
அன்னை மடியில் பிறந்த உன்னால் என்ன பயன் தான் விளைந்தது
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழாபத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்