கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
கிரேசி மோகன்
“யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்,
பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்,
கண்டாயோ கேசவா, கண்ணனில் காளியை !
விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….
“சீட்டிப்பா வாடை, சிமிழ்வாய் சிரிப்புடன்,
மாட்டிடையன் போட்டியாய் மாதங்கி; -கோட்டினால்,
கண்ணனைக் காளியைக், கேசவ் அடைத்தனன்,
வண்ணச் சிறைக்குள் வளைத்து”….கிரேசி மோகன்….