இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி

–கவிஞர் காவிரிமைந்தன்.

 

 

Puthiyaboomi
புரட்சி நடிகர் என்கிற அடைமொழியோடு எம்.ஜி.ஆர் திரைத்துறையில் அரசாட்சி நடத்தியபோது அவர்தம் திரைப்படங்களில் இடம்பெற்ற கொள்கைப் பாடல்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உரம் ஊட்டியதை எவரும் மறுக்க முடியாது.

ஏழைகளின் தோழனாய், எல்லோருக்கும் நண்பனாய், ஏற்ற பாத்திரங்களில் எல்லாம் முத்திரை பதித்து, எம்.ஜி.ஆர். என்கிற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்காத உதடுகளே இல்லை என்கிற நிலையை ஏற்படுத்திய அற்புதம் தமிழகத்தில் மட்டுமே நடந்துகொண்டிருந்தது.

அந்தச் சரித்திரத்தில் பங்கேற்ற திரைப்பாடலாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவருக்கேற்ற பாடலை உருவாக்குவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  இன்னும் சொல்லப்போனால், அக்கவிஞர்களின் வரலாற்றிலேயே இத்தகு பாடல்கள் தலைசிறந்த பாடல்களாக விளங்குகின்றன.

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

கவிஞர் பூவை செங்குட்டுவன் பலநூறு பாடல்கள் எழுதியிருந்தாலும்…எம்.ஜி.ஆருக்காக எழுதிய இந்தப் பாடலில் அவர் பெற்ற புகழ் உச்சமானது.

கவிஞர் பூவை செங்குட்டுவன்puthiya boomi group

திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு அச்சாணியாய் விளங்கிய  அன்புத்தலைவரை பேரறிஞர் என்றழைத்து மகிழ்ந்த தொண்டர்கள்  எம்.ஜி.ஆர். தனது திரைப்பாடல் வரியில் அவரை நேரடியாக சுட்டிக்காட்டும் பதிவைக் கண்டு குதூகலம் அடைந்தனர்.

இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதிய பூமி என்கிற இவ்வரிகள் இளைஞர்களுக்கு தந்த ஊட்டம் கொஞ்சமல்லவே!

http://youtu.be/L4HX839IVuA
காணொளி: http://youtu.be/L4HX839IVuA

திரைப்படம்: புதிய பூமி (1968)
பாடல்: பூவை செங்குட்டுவன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
குரல்: டி. எம். சவுந்தராஜன்

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை

காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்
(நான்உங்கள்வீட்டுப்பிள்ளை)

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரமாகும் கொள்கை
(நான்உங்கள்வீட்டுப்பிள்ளை)

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி
(நான்உங்கள்வீட்டுப்பிள்ளை )

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க