கவிஞர் காவிரி மைந்தன்.
hqdefault

இது அரைகுறை மயக்கமல்ல.. ஆனந்த மயக்கம்..
திருவிழாக் காலமல்ல.. மங்கையின் திருமணக்கோலம்
மனதிற்குள் மழைபொழியும்.. கனவுகள் ஆயிரம் தோன்றும்
பருவத்தின் வாசல்தனிலே தேர்வுகள் நடத்தல் போல
உள்ளத்துள் மின்சாரம் அங்கே உற்பத்தியாகும் என்றே
உணர்ந்தவர் சொல்வதுண்டு!. உண்மையதிலே உண்டு!

தன்னிலை மறக்கும் பெண்மை வெட்கத்தில் தலைகவிழ
அந்நிலை என்னென்று கேட்டால் எப்படிச் சொல்லும்?
பெண்மையின் பூரணமே அந்த நாணத்தில் நலம்பாடும்போது
தோன்றும் நயனங்கள் தானே அப்பெண்மையைத் தாலாட்டச்
சொல்லும்?  எழுதப்படிக்கத் தெரியாதபோதும்கூட அறிகின்ற
கலைதனில் ஒன்று!  மலருக்குள் தேனெடுக்கச் செல்லும்!

வண்டின் தேவையை..   மலரா அறியும்?
அறிந்தா இதழ் திறந்து வைக்கும்?
தோன்றிய உயிரனங்கள் அணைத்துகொள்ளும்
தோன்றலின் ரகசியம் தானே!
ஆயினும் இங்கே மனுடன் அனுதினம் தேடும் தெய்வீக ராகம்!

அன்பே.. அன்பே..   பெண்மையும் சொல்லும்
பதில் .. அத்தான்.. அத்தான்..
பாசமலரில் விளைந்த பாட்டு மலரிது..
கற்பனைச் சிறகடித்து கண்ணதாசன் எழுதிய பாட்டு..
பி.சுசீலா குரலால் இனிக்கும் பாட்டு!
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மயங்கலாம் கேட்டு!
மயங்குகிறாள் ஒரு மாது!!

 

 

http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk
காணொளி: http://www.youtube.com/watch?v=AK7qnBt_gKk

ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ம்

மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆ

மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
துணிவில்லையா பயம் விடவில்லையா?
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா?
துணிவில்லையா பயம் விடவில்லையா?
நாழிகை செல்வதும் நினைவில்லையா?
நாழிகை செல்வதும் நினைவில்லையா?
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆ

மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள் தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?
ஆஆஆஆஆஆஆஆ

மயங்குகிறாள் ஒரு மாது தன்
மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

அஹஹா அஹஹா அஹஹாஹஹஹாஹாஹ
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

படம்: பாசமலர்
பாடல்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: பி. சுசீலா

05V&Rpsuseelasavithri

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.