மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட …

0

— காவிரிமைந்தன்.

Capture

பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்…

மையேந்தும் விழியாட மலரேந்தும் குழலாட …

“பூஜைக்கு வந்த மலர்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது! பி.பி.ஸ்ரீநிவாஸ்- பி.சுசீலா குரல்கள் இழைந்து தரும் விருந்து!  இதயமலர்கள் இரண்டு இணைந்து திரையில் தோன்ற இசையின் கோலம் புல்லாங்குழலில் புறப்பட்டு வருகிறது.

ஆண்மையும் பெண்மையும் சந்திக்கும் அந்தப்புரமென்றும், தனிமையில் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் சொந்தப்புரமென்றும், மல்லிகை மலரணை பூத்திரி, ராத்திரி என்கிற வார்த்தைகள் சரளமாய் வந்துபோகுமென்றும், பருவம் சுமந்துவந்த கனவுகளெல்லாம் நனவாய் மாறும் இரவென்றும் பல்வேறு வடிவங்கள் தாங்கிநிற்கும் முதலிரவு காட்சிதான்!

அன்பின் அரவணைப்பு, ஆசைகளின் மொழிபெயர்ப்பு, பெண்மையின் மௌனகீதம்… கண்களில் காந்தம்… இன்னுமென்ன வேண்டும் இதைப் பற்றி பாடல் தீட்ட…  அழகியல்.. . அகவியல் இரண்டையும் கலந்திங்கே அமுதமாய் பொழிகிறது கவிஞர் வாலியின் தேன்மழை!

‘பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்’ எந்த விருந்திலும் பரிமாறுபவர் பசியாருவதில்லை!  அதுவும் பரிமாறும் நேரத்தில்!  ஆனால் களவியலில் மட்டும்தான் இந்தக் கதை ரகசிய ஓலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.  நான்  தந்து நீ பெறவும்,  நீ தந்து நான் பெறவும் பசியாறுதல் நடக்கிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட பல்லாயிரம் பாடல்களிலும் இல்லாத வார்த்தைப் பிரயோகம்…  கவிஞர் வாலியை பாராட்ட வார்த்தைகளைத் தேட வைக்கிறது!  ஒற்றை வரியில் சொன்னால் வாலியால் வரையப்பட்ட பூஜைக்கு வந்த மலரிலிருந்து சொட்டும் தேன்!   திருமதி P சுசீலா அவர்கள் P B ஸ்ரீனிவாஸுடன் பாடும் பாடல்.

http://youtu.be/sldOFMMUQlY
காணொளி:  http://youtu.be/sldOFMMUQlY

……………………………………………………………………………
படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
பாடல்: வாலி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலா,  P B ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
……………………………………………………………………………

மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட
நான் ஆடுவேன்…

குழல் தந்த இசையாக
இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக
நான் பாடுவேன்…

(கண் மையேந்தும் விழியாட)

உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளிவீசும் உனக்காக
நான் வாழுவேன்…

விரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக
நான் மாறுவேன்…

(கை விரல் கொஞ்சும் யாழாக)

இளங்காதல் வயதாலே தனியாகினேன்..
அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்….

இமை மூடி தூங்காமல் போராடினேன்…
உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்…

(கண் மையேந்தும் விழியாட)

கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்…
உன் மடிமீது தலை சாய்த்து இளைப்பாறினேன்…

அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்..
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்…

(கண் மையேந்தும் விழியாட)

vaaliv&r (1)pbs ps

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *