நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
— கவிஞர் காவிரிமைந்தன்.
சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது
இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?
நட்சத்திர ஜன்னலில்……….
சூரிய வம்சம் திரைப்படத்திற்காக கவிஞர் மு.மேத்தா வரைந்த கவிதையிது! ஒரு கவிஞனின் ஒளிப்படைப்பு! உள்ளத்தில் தோய்ந்திருக்கும் கவிதை வெள்ளத்தின் உற்சாகப் பாய்ச்சல்!
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே கண்ணில் படுகின்றவற்றையெல்லாம் கட்டி இழுத்து வர கவிஞர்களால்தான் முடியும் என்கிற உண்மையை இப்பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன!
சந்தோஷ சாம்ராஜ்ஜியமாய் இல்லம் துலங்கும்போது இன்ப கீதங்களின் முழக்கம் இப்படித்தான் இருக்குமோ?
சிந்தனையில் இவர் தொடும் உயரங்களைப் பாருங்கள். இமயத்திற்கு பொன்னாடை போட்டுவிடலாம் என்கிறார். உற்சாகம் இறக்கைக் கட்டியல்லவா பறக்கிறது!
மென்மையான வார்த்தைப் பூக்கள் மலர்வதைப்போல் மலரச் செய்து இசையிலே துள்ளி குதிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.
ஓங்கும் உந்தன் கைகளால் வாழ்க்கையைப் புரட்டிப்போடு! புது வாழ்வாழ்வின் கீதம்பாடு!
நம்பிக்கைக்கான நங்கூரங்களைப் பாடலெங்கும் பரவியிருக்கிற கவிஞரின் சாதுர்யம் இவர் சூர்ய வம்சத்துகாரர் என்கிற ரகசியப் பதிவைத் தந்துவிடுகிறது!
http://youtu.be/YYYtkQV3Ym0
காணொளி: http://www.youtube.com/watch?v=YYYtkQV3Ym0
நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர…)சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்
புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்
பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா
சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா
வானம்பாடி வாழ்விலே
வருந்தி அழுவதில்லை வணங்கி விழுவதில்லை
(நட்சத்திர…)சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்
சந்தமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்
சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்ததாரடி யாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ
மேகத்தில் மீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா
ஓங்கும் உந்தன் கைகளால்
வானைப் புரட்டிப்போடு புது வாழ்வின் கீதம் பாடு
(நட்சத்திர…)
…………………………………………………………………………………………….
படம்: சூர்யவம்சம்
வரிகள்: மு. மேத்தா
இசை: SA ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ, சுனந்தா