ஏழு ஸ்வரங்களுக்குள்
காவிரி மைந்தன்
காலச் சக்கரத்தின் பற்கள் வினாக்களால் ஆனவை போலும். பிறப்பு முதல் இறப்பு வரை இந்த வினாத் தொடர் நம்மை விடுவதேயில்லை. கடமை என்கிற காரியங்கள் நடக்கும். காலை முதல் இரவு வரை வினாக்களும் விழிக்கின்றன. பத்திரிக்கைகளின் தலைப்பு செய்திகள் எப்படி பரபரப்பை ஏற்படுத்துகின்றனவே அதைவிட பல மடங்கு மனதில் பதிப்பாகும். தினசரி வினாக்கள் எத்தனை? எத்தனை? விடைதேடி அலைவதற்குத் தானே பொழுதே விடிகிறது! அன்றைய பிரச்சினையை சமாளிப்பதும் அல்லது சந்திப்பதும் நடக்கும்போதே நாளைய கேள்வி நம்மைத் தாக்கும். என்ன செய்யப்போகிறாய்? எப்படிச் செய்யப்போகிறாய்? உன்னால் முடியுமா? செய்யத்தான் வேண்டுமா? என்று பல துணைக் கேள்விகளும் மனதிற்குள் ஒன்றன்பின் ஒன்றாய் ஒவ்வொரு நாளும் துள்ளி குதிக்கின்றன. இருதியிட்டுச் சொல்வதும்.. தீர்மானிப்பதும் எப்போதும் இலகுவாக இருப்பதில்லை. இதனால்தான், மனச்சுமைகூடி மனிதன் தடுமாறுகிறான்.
ஏழே ஏழு ஸ்வரங்கள்தான். இதிலிருந்து பிறக்கும் ராகங்கள் பல. அதேபோல் இதயச் சுரங்கத்துள் எத்தனை எத்தனைக் கேள்விகள் எழுகின்றன.. கண்ணதாசனின் ஆழ்மனம் எழுதிய வரிகள் இவை என்றே நேசிக்கிறேன். வாழ்க்கையை பக்கம் பக்கம் படித்துப் பார்த்திட இவ்வரிகளை வாசிக்கிறேன்.
மெல்லிசை மன்னரின் சங்கீத சாகரத்தில் சங்கீத வாணிதிருமதி வாணிஜெயராம் பாடிய பாடலிது. பாலச்சந்தர் படங்களுக்கு பாடல் எழுதுவது என்பது இனிய அனுபவம் என்று கண்ணதாசன் கனிந்துருகிச் சொன்னதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இயக்குனரது பார்வை எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் நிரூபித்த தாதா சாஹிப் பால்கே விருது பெற்ற கே.பாலச்சந்தர் .. அமரத்துவம் பெற்றாலும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றாலும் அவரின் பதிவுகள் இந்த பூமியில் நிலைபெறும். அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தில் கற்பனைக்கு எட்டாத கதையமைப்பைக் கொண்டு அதற்கேற்ற இசை.. பாடல்கள் என்று கூட்டி.. நமக்கெல்லாம் புதுமை விருந்தளித்த இயக்குனர் சிகரத்திற்கு .. இந்தப் பாடல் சமர்ப்பணம்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் –
இயக்கம் – இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் – கவியரசு கண்ணதாசன்
திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
பாடியவர்: வாணி ஜெயராம்
ஆ……… ஆ………..
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம் (ஏழு)
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி ஆ…..
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி – அது
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பினனும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்
ஏனென்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் – மனிதன்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் (ஏழு)
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் ஆ………
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் – நீ
எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
நமக்காக நம் கையால் செய்வது நன்று
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை ஆ………
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை – என்றும்
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் – அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாபம்
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க – அதை
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க – எந்த
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
வேதனையும் மாறும் மேகத்தைப் போல
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
http://www.youtube.com/watch?v=csnyfoXugdE