-றியாஸ் முஹமட்

போனதும் விமானம்
வந்ததும் விமானம்
மறக்க முடியவில்லை
ஏழையாகப் பிறந்ததால்
நான்பட்ட அவமானம்…!

வண்ண வண்ணக் காகிதம்
வதங்கியது என் வாலிபம்
எல்லாமே செய்தது
இந்தப் பணம்
இல்லாமல் ஆனேன்
நடைபிணம்…!

எல்லாம் கழன்ற பட்ட மரம்
யாருமில்லாத் தனி மரம்
போட்டார்கள் பல கோஷம்
கண்டேனே பல வேஷம்
ஆடினார்கள் நல்ல
ஆட்டம்…!

உயிரானவளும் மௌனம்
உயிரெடுக்க வந்தான்
எமனும்
உறவுகள் என்னைப் பந்தாட
ஏறியது விமானம்
பறந்தது ஆகாயம்
வளைகுடாப் பயணம்

தொலைத்தேன் உறக்கம்
சிந்தினேன் இரத்தம்
ஆனாலும் விடவில்லை
என் ஊக்கம்
சேர்த்தேன்
பணம்… பணம்….!

இப்ப என் பையோ
கனம் கனம்
உறவுக் கடிதங்களோ
தினம் தினம்
உறவாடக் கூப்பிடுகிறார்கள்
ஊர் சனம்…சனம்…!

பணமில்லா வாழ்க்கை
பூஜ்யம்
இதையறிய எதற்குடா
மியூசியம்?

இதைப் புரிந்தால்
நீதானடா
வாலிபச் சிங்கம்

வருத்தப்படாத
வாலிபர் சங்கம்
உங்களுக்கு இந்தக்
கவிதை சமர்ப்பணம்!


பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பணம்

  1. ரியாஸ், இது வளைகுடா போனவர்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுக்க திரவியம் தேட குடும்பம் விட்டு பிரிந்தவர்களுக்கு பொருந்தக்கூடிய கவிதை.

    இந்தக்கவிதையில் வார்த்தைகள் மிக பொருத்தமாக அமைந்து விளையாடி இருக்கின்றன.

  2. மிக்க மகிழ்ச்சி  சகோதரர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.