றியாஸ் முஹமட்

கொமைனி வீதி, வாழைச்சேனை-05 இலங்கை எனும் முகவரியைச் சேர்ந்த எனது பெயர் றியாஸ் முஹமட். மட்.ஓட்டமாவடி தேசியப் பாடசாலையில் உயர் தரம் -(2000-2002) கற்றதுடன், வெளிவாரி பட்டபப்டிப்பினை படித்து வரும் நான் தற்போது மத்திய கிழக்கு நாடான கத்தாரில், கத்தார் டெலிகம் கம்பெனி வேலை செய்து வருகின்றேன் பள்ளிப்பருவத்திலிருந்தே கலையில் ஈடுபாடு கொண்ட எனது எழுத்துப்பயணம் ஆரம்பத்திலேயே மித்திரன் வார மலர், தினமுரசு வாரமலர், சுடர் ஒளி, வீரகேசரி போன்ற பத்திரிகையில் ‘மாவடிச்சேனை முஸம்மில்” ‘றியாஸ் முஹமட்” என்ற பெயருடன் ஆரம்பமானது. இன்று ‘கல்குடாவின் எழுத்து” என்ற பெயருடன் முகநூல், டிவீட்டர் twitter ,orkut போன்ற இணையத்தளங்களிலும் இந்திய சஞ்சிகைகளிலும் வருவதுடன் மாத்திரமல்லாது, மத்திய கிழக்கு ‘தமிழ் டைம்ஸ்” பத்திரிகையில் தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், இஸ்லாமிய ஆக்கங்களை எனத் தொடர்கிறது. மண் வாசணையோடு எழுதுவதே எனக்கு பிடித்திருக்கின்றது