வேண்டும் வேண்டும் உங்கள் உறவு …

கவிஞர் காவிரிமைந்தன்.

vaendum vaendum2

 

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு …

இது அன்பின் பரிபாஷை… ஆழ் மனத்தின் குரல்…
மண்ணில் வந்து பிறந்த உயிர்களில் மானுடர்களுக்கான தேவதரு!
இன்னும் இன்னும் என்று உள்ளத்தில் தோன்றும் ஊற்று…
எழுதிப் படிக்கும்போதே இனிக்கும் அமுதம்!
குரலில் பிறந்து வந்தால் மயக்கும் கல்யாணி!
மாலைப் பொழுதுகளில் மனதில் புது வருடல்!
தேனில் நனைத்தெடுத்த பலாச் சுளை!
உயிர்வரை சிலிர்க்கும் உன்னதக் கவிதை!
மொத்தத்தில் எனக்கு நீ வேண்டும்… உனக்கு நான் வேண்டும்…

கவிஞர் வாலி அவர்கள் வரிகள் தர மெல்லிசை மன்னர் இசையைத் தர… குரலைத் தருகிற குயில்கள்… எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்…

வசந்தத்தில் ஓர் நாள் என்பது திரைப்படம். ஆனால் இப்பாடல் கேட்கும்போதெல்லாம் வசந்தம் வரும்!

அணுக்களில் நிறைந்து நம்மை மயக்கும் காதல் அன்பில் விளையும் இன்ப ராஜ்ஜியம்…

சொல்லால் அதனை சொல்லிவிட முடியாது… இருந்தாலும் கவிஞர்களின் முயற்சி…தொடர்கிறது!

வர கவிஞர் போல் வந்த கவியரசர் இன்பத்துப்பால் பக்கம் நம்மை ஈர்க்கிறார்…

ஒவ்வொரு வரியிலும் உள்ளம் கவர்கிறார்… ஆணின் தேவையென்ன பெண்ணவள் அறிவாள்…

பெண்ணின் தேவையும் ஆணவன் அறிவான். உள்ளங்கள் இணைந்தபின் உரிமைகள் வளரும்…

உணர்வின் அலைகள் இப்படியா எழும்? இப்பிறவி தாண்டியும் பிறக்கின்ற பிறவி எல்லாம் உன்னுடனே நான்…

என்கிற உயிர்க்காதல் சரிதம் எழுதும்… காதலுக்கு மகுடம் சூட்டும்!

இப்பாடல் ஒன்று போதும் … காதலில் வேண்டியதெல்லாம் கிடைக்கும்….

காணொளி: https://www.youtube.com/watch?v=hjEe83VEt3c
படம்: வசந்தத்தில் ஓர் நாள்
கவிஞர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், எஸ்.பி.பாலசுப்ரமணியம்
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பெண்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

ஆண்:
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்
கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடை மழையில் நான் நனைந்திட வேண்டும்
வேண்டும் வேண்டும் உந்தன் அழகு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

பெண்:
உலகம் என்னைப் புகழ்ந்திட வேண்டும்
உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்
ஆண்:
உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்
இருவரும்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்
வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

https://www.youtube.com/watch?v=hjEe83VEt3c

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.