பவள சங்கரி

தலையங்கம்

“கனவு காணுங்கள்” என்றார், அப்துல்கலாம் . கனவு காண்கிறோம். இந்தியா வல்லரசு ஆகவேண்டும். இது மட்டுமா? இது எங்ஙனம் சாத்தியம்? அதை நோக்கிய கனவுதான் இது! மக்களை வழிநடத்திச் செல்ல நல்ல தலைவர் வேண்டும் என்று கனவு காண்கிறோம். நல்ல தலைவர்களை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். யாரேனும் ஒருவர் இப்படி வந்தால் நாடே கட்டாயம் பின்னால் வரும். இளைய சமுதாயமே நாட்டு நடப்பைக் கண்டு நெஞ்சம் துடிக்கவில்லையா. உம் கனல் தெரிக்கும் பார்வையால் சுட்டுவிடத் தோன்றவில்லையா..

நம் கனவுத் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? காமராசர் போல் படிக்காதவராக இருந்தாலும்  பண்பாளராக இருக்கலாம். கக்கனைப் போல எளிமையான நேர்மையானவராக இருக்கலாம். காமராசர் இறந்தபோது அவர் விட்டுச் சென்ற சொத்து நான்கு அரைக்கை சட்டை, நான்கு வேட்டி, 150 ரூபாய் பணம்… இவ்வளவுதான் அவர் சொத்துக் கணக்கில் தவறு நேரவே வாய்ப்பிருக்காது. கணக்கிடுவோருக்கும் எளிது. கக்கனின் சொத்து ஒரு பழைய சைக்கிள், இரண்டு கதர் வேட்டி, 2 கதர் சிப்பா அவ்வளவுதான். தோழர் ஜீவா அவர்களிடமும் கிட்டத்தட்ட இதே அளவுதான் சொத்து. ஆனால் அவர்களெல்லாம் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட பெருந்தலைவர்கள். காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின்போது, “மாணவர்களே கலாச்சாலை விட்டு வாருங்கள், சுதந்திரப் போராட்டத்திற்காகப் பாடுபடுங்கள். இளைஞர்களே தொழிலகத்தை விட்டு வாருங்கள் நாட்டின் போராட்டத்திற்கு நீங்கள் தேவை”, என்றார். இன்று இளைஞர்கள் கலாச்சாலையையும், தொழிற்சாலையையும் விட்டு தெருவில் இறங்கி சேவை செய்யத் தயாராக இருந்தாலும், தலைமையேற்று வழி நடத்த நல்ல தலைவர்கள் வேண்டுமே. கல்வி கற்காவிட்டாலும் கல்வி பற்றி தெரிந்தவர்கள் தேவை. பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்தவர் இல்லையென்றாலும் எதைச் செய்தால் இந்தியாவின் பொருளாதாரம் நிலைபெறும் என்று அறிந்தவராக இருக்க வேண்டும். சுய இலாபம் பார்க்காமல் மக்கள் நலம் பார்ப்பவர்களே தேவை. இந்தியாவை வல்லரசாக்கும் தலைவரைத் தேட வேண்டியதில்லை. மக்களை வலிமையுடையவராக மாற்றக்கூடிய நல்ல தலைவரே இன்றைய அவசியத்தேவை. உறங்கவில்லை. அப்துல் கலாம் சொன்ன கனவைக் காண்பதற்காக உறங்கவில்லை. நினைவோடு இருக்கிறோம். நல்ல தலைவரை எதிர்பார்த்து.. நல்ல தலைவரின் வழி செல்லக் காத்திருக்கிறோம்.. தேவை நல்ல தலைவர்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேவை!

  1. கனவு காண்கின்றோம் . 
    எப்போதும் கனவு காண்கிறோம் 
    கனவு கானல் நீர் என்று தெரிந்தும் 
    கனவு காண்கின்றோம். 
    எப்போதும் கனவு காண்கின்றோம் 
    காமராசர், கக்கன் எல்லாம் உதாரணம்தான் 
    அவ்ர்களைப் போல் யாரும்  வர மாட்டார்கள் என்று தெரிந்தும்
    கனவு காண்கின்றோம்.
    எப்போதும் கனவு காண்கின்றோம் 
    தலைவர்கள் எண்ணுமளவு  சொத்து வைத்திருப்பார்கள் என்று 
    கனவு காண்கின்றோம்.
    எப்போதும் கனவு காண்கின்றோம் 
    நேர்ர்மையான அரசாங்கம் வரும் என்று 
    கனவு காண்கின்றோம்.
    எப்போதும் கனவு காண்கின்றோம் 
    நல்ல தலைவர் தலைமை ஏற்பார் என்று 
    கனவு காண்கின்றோம்.
    எப்போதும் கனவு காண்கின்றோம் 
    கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம்
    கனவு காண்கின்றோம்.
    எப்போதும் கனவு ம்ட்டும்தான் காண்கின்றோம் 

  2. கனவு ஒருநாள் நிச்சயம் நனவாகும்…
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.