-பா வானதி வேதா. இலங்காதிலகம்

கரிக்குருவி, வலியன் குருவி, கரிச்சான்,
கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன், காரியெனும்
கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி
கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               sparrow
கீதமிசைக்கும்; அடர்த்தியற்ற காட்டில் வாழும்
வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில
’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்
பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்
பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட
பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

எறும்புப் புற்றின் மீது அமருமாம்
எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!
எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்
எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இரட்டைவால் குருவி!

 1. தொலைக்காட்சித் தொடராக ” இரட்டைவால் குருவி ” பார்த்த போது
  அதில் விவாகரத்துப் பெற்று 3 வருடத்தின் பின் சந்திக்கும் மாஜி 
  தம்பதியினரிடை நடக்கும் மனப் போராட்டம் பற்றியதாக 
  இருக்கும் போது கதாசிரியர் என்ன சிந்தையில் 
  இரட்டைவால் குருவி என்று தலைப்பு வைத்திருப்பார் என்று 
  ஆராய எண்ணி அது பற்றித் தேடினேன் என்னைப் போல்
   வேறும் பலருக்கு சிந்தை வந்திருக்குமோ  என்று எழுதியது.
  (தன் கூட்டு எல்லைக்குள் வரும் யாராயிருந்தாலும் எதிர்க்கும் குணமுடைய குருவி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *