அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

1

akav1

திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் வரிகள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல.. வாழ்க்கை முழுமைக்கும் வழிகாட்டும் விளக்காக அமைய முடியும் என்பதற்கு சான்று பகரும் பாடல்களை கவிஞர் பெருமக்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி போன்றோர் வழங்கியிருக்கிறார்கள்.

சமுதாய அவள்கள், சீர்கேடுகளைச் சாடுவதும் அவற்றை சீர் செய்ய மொழியைப் பயன்படுத்துவதும் இவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றானது. அவ்வாறு அமையும்போது செம்மை மொழிவளத்தால் இசைக் கோர்வையுடன் கை கோர்க்கும் வார்த்தைச் சரங்களை கொட்டிமுழக்கும் கொள்கைப் பான் பாடுகிறார்கள்.

குறிப்பாக மக்களின் மனம் கவர்ந்த கதாநாயகனுக்காக இப்பாடல்கள் அமைந்துவிடும்போது புதிய பொலிவுடன் புரட்சியின் முழக்கங்கள் புறப்பட்டு வருகின்றன. ஆம். இதோ.. இந்தப் பாடல் தலைவன் திரைப்படத்திற்காக கவிஞர் வாலி வரைந்தளித்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைப்பில் ஏழிசை வேந்தர் டி எம்.சௌந்தரராஜன் பாடியதாகும்.

அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும் avali
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்

……………………………..
பாடல்: அறிவுக்கு வேலை கொடு
திரைப்படம்: தலைவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1970

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு விடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
தீபத்தை ஏற்றி வைத்தான்
ஆகாத வழக்கமெல்லாம் அறிவுக்குப்
பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்
ஆக்கத்தைக் கெடுத்து வைக்கும் மனிதனின்
அழிவுக்கு வழி வகுக்கும்

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்
மண்வெட்டி கையிலெடுப்பார் சிலபேர்
மற்றவர்க்குக் குழி பறிப்பார் அது
தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதைத்
தானறிய மறந்திருப்பார்

பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும்
பந்தெடுத்து விட்டு எரிந்தால் சுவர் மேல்
பட்டது போல் திரும்பி வரும் இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ? இந்த்த்
தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்குத்
தீங்கு செய்யும் எண்ணம் வருமோ?

அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
ஆஹாஹஹ ஹா

https://www.youtube.com/watch?v=alcegBOWi3I

ஐந்து அறிவு வரை யுள்ள ஜீவன்களைத் தாண்டி ஆறாம் அறிவாம் பகுத்தறிவு தானே .. எது நல்லது.. எது கெட்டது எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற பகுத்துணர்வு மனித குலத்திற்கான மாபெரும் வரப்பிரசாதம். “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..” என்னும் குறளின் குரலும் கேட்கிறதல்லவா?

வினாக்களும் அவற்றுக்கான விடைகளும் அறிவு வெளிச்சத்தில் மட்டுமே ஆராயப் பட முடியும். மட்டிலா நம் அறிவுச் சுரங்கத்தை எத்தனை சதவிகிதம் நாம் பயன்படுத்துகிறோம் என்கிற கேள்விக்கான விடையில் தனி மனித வாழ்வின் வெற்றிக்கான ரகசியம் அடங்கியிருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அறிவுக்கு வேலை கொடு…பகுத்தறிவுக்கு வேலை கொடு…

  1. ஒன்பது வாசல் வைத்தே உடம்பென்னும்
    கோட்டையைக் காட்டி வைத்தான் அந்தக்
    கோட்டைக்கு விளக்காக அறிவென்னும்
    தீபத்தை ஏற்றி வைத்தான் என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிகள் அற்புதமான வரிகள். நாம் நமது உடலை நன்றாக பராமரித்தால் மருத்துவரை நாட வேண்டிய அவசியமில்லை.கவிஞர் காவிரிமைந்தனுக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.