இலக்கியம்கவிதைகள்

எதிர்பார்ப்பு!

பவள சங்கரி

 

மணி சாரின் ஆதிவாசி எம்மையும் ஆதியை வாசிக்க வைத்தான்…. ஓவியத்தைப் பேசவைக்கும் மாயம் அறிந்த பிரம்மன்!

f79c9ee5-3722-4cfa-9238-d74e1d9d154a

ஆக்கியோனின் ஆகச்சிறந்த படைப்பு
ஆறுதலாய் அடிச்சுவடிகள் அணிவகுப்பு
பட்டும் பகட்டும் படியேறி பலரோடிணக்கம்
பரிவும் பாசமும் பழங்குடியின் கழிவிரக்கம்
உண்ணும் உடைப்பெருஞ் செல்வராயினும்
கண்ணும் கருத்தும் கனிவாய் கவர்ந்திழுக்க
பொன்னும் பொருளும் போகமும் வேகமும்
நெய்யுடை அடிசிலும் அமிழ்தினிய அவியலும்
இட்டும் தொட்டும் இழிந்து இனிமையறியாதுபோம்
ஒட்டும் திட்டும் ஓட்டை வட்டிலும்
ஒழுகலும் ஒத்தும் ஒவ்வாது போனாலும்
வழக்கொழிந்த வாதமும் வஞ்சியர் வேதமும்
வசமிழந்த வார்த்தைகளும் வகையறியா நேசமும்
வாய்த்துணரா பாமரனாயினும் பாதகம் செய்யான்!
பகையறியான்! பயக்குறை கொள்ளான்!

Print Friendly, PDF & Email
Share

Comments (5)

 1. Avatar

  இனிய சந்த வரிகள், தாளத் தமிழ்ச் சொற்கள் ஓவிய மணியின் காவிய வடிவை அணி செய்கின்றன.

  பாராட்டுகள் பவளா.

  சி. ஜெயபாரதன்

 2. Avatar

  ஓவியமும் பேசுகிறது ! சொற்களும் பேசுகின்றன….ஓவியம் ஒரு காவியம்.. கவிதை ஒரு ஓவியம் ! பாராட்டுக்கள் !

  க.பாலசுப்ரமணியன் 

 3. Avatar

  வாய்த்துணரா பாமரனாயினும் பாதகம் செய்யான்!
  பகையறியான்! பயக்குறை கொள்ளான்! பாராட்டுக்கள்

  . நன்றி வணக்கம்

 4. Avatar

  மிக்க நன்றி.

 5. Avatar

  மிக்க நன்றி ஐயா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க