கேள்வி: தெலுகு (Telugu) என்பதைத் தமிழில் தெலுங்கு எனப் பலுக்குவது ஏன்?

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தெலுகு (Telugu) > தெலுங்கு?

  1. தெலுங்கு எனச் சொல்வதுதான் சரி.
    பொதுவாக தெலுங்கு மொழி பேச்சு மொழியாகவே பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை இருந்தது. நடுவே ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் தெலுங்கு வரிவடிவம் இருப்பதாக கல்வெட்டுகள் இருக்கிறது என்றாலும் காவியங்கள் இலக்கியங்கள் என எதுவும் வரவில்லை. முதன் முதலில் தெலுங்கு மொழியில் ஆதிகவி நன்னய்யா மகாபாரதம் பாடினார். 1052 ஆம் வருடம் ராஜமகேந்திரபுரத்தில் இராச ராச நரேந்திரன் என்கிற வேங்கி மன்னர் முன்னிலையில் அரங்கேற்றம் நடந்தது. ஆனால் இந்த மகாபாரதத்தை சமுஸ்கிருத வரிவடிவத்தில் எழுதிவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் 11 ஆம் நூற்றாண்டு பிற்பகுதிவரை கல்வெட்டுகளில் உள்ள தெலுங்கு வார்த்தைகள் வடமொழிவடிவத்தில்தான் பொறிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு பேசும் நாடுகளில் வடமொழி தாராளமாக புழங்கிவந்ததால் கற்றவர்கள் மத்தியில் தெலுங்கு மொழிக்கு தமிழ் மொழிக்குக் கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லையாதலாம் வடமொழியே தெலுங்குக்கு மூலமாக பயன்படுத்தினர்.  ஆனால் தெலுங்கில் முதன்முதலாக வரிவடிவம் பெற்ற எழுத்துகள் 14ஆம் நூற்றாண்டு உரைநடைத் தொகுப்பான ‘பல்நாட்டிசரித்திரம்’ மூலமாகத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.

    தெலுங்கு என்ற பதம் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. அதுவும் 11ஆம் நூற்றாண்டு கலிங்கத்துப் பரணியில் யுத்தத்தில் தப்பித்த கலிங்கர் ‘நாம் தெலுங்கு மொழி பேசுவோர் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதாக ஜெயங்கொண்டார் பாடியுள்ளார். 12ஆம் நூற்றாண்டு பெரிய புராணத்தில் தெலுங்கு கன்னடம் என்ற இரு மொழிகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

    முதன்முதலில் தெலுங்கைத் தெலுகாக்கியது ஸ்ரீகிருஷ்ணதேவராயர்தான். அவர் பாடிய காவியம் இந்த மொழியில்தான் பாடப்பெற்றது. இத்தனைக்கும் ராயருக்குத் தாய் மொழி துளு. ராஜ்ய மொழி கன்னடம். பாடலாக வந்த மொழி தெலுங்கு. பாடப்பட்ட பொருள் தமிழைப் பாடிய ஆண்டாளும் பெரியாழ்வாரும்.

     ராயர் தெலுங்கில் இப்படி எழுதினார். ‘தேச பாஷலந்து தெலுகு லெஸ்ஸா’ (தேசத்தில் பேசப்படும் மொழிகளில் தெலுங்கை விட இனிமை கிடையாது) என்று விஷ்ணு மூர்த்தி ராயருக்குச் சொல்வதாகவும் அந்த தெலுகு மொழியில் காவியம் பாடவும் கடவுளே அழைப்பு விடுப்பதாக ஸ்ரீகிருஷ்ணதேவராயர் அந்த ஆமுக்தமால்யதா எனும் காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார். இவர் சக்கரவர்த்தியாகையினால் தெலுங்கு சான்றோர் அவையில் தெலுங்கை தெலுகாக ஏற்றுக் கொண்டனர். 

    ஆனால் சரித்திர ஆதாரங்கள் தெலுங்குதான் சரியான வார்த்தை என்று ருசுப்படுத்துகின்றன. தெலுங்கு ‘த்ரிலிங்கம்’ எனும் மூன்று புகழ்பெற்ற சிவன் கோயில்கள் கொட்ண்ட பிராந்தியத்தில் பேசப்பட்ட பாஷையினால் தெலுங்கு என மருவி அழைக்கப்பட்டதாக பல தெலுங்குச் சான்றோர் எழுதியுள்ளனர்.

    அண்ணா கண்ணன், நீங்கள் கேட்டதோ ஒருவரிக் கேள்வி. நான் சொன்னது மிகவும் நீண்டுவிட்டது.

  2. அன்புமிகு திவாகர், தங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி. தெலுங்கு, இப்படி ஒரே வீச்சில் தெலுகு ஆனது வியப்பே. 

  3. ஒரே வீச்சில் ஆனதுக்கே காரணமே சக்கரவர்த்தி எனும் ஆளுமைதான் அண்ணா கண்ணன். அதுவும் சாட்சாத் மகாவிஷ்ணு ராயருக்குக் காட்சி தந்து ’இப்படிப்பட்ட தெலுகு பாஷையில் என்னைப் பாடு’ என ராயர் முதல் வரிகளிலேயே எழுதும்போது இதை எதிர்த்துக் காரணம் கேட்க யாருக்குத் தைரியம் வரும். ஏன், எப்படி எதற்காக என்பதெல்லாம் இந்தக் கால ஜனநாயக அரசாங்கத்தில் கேட்கமுடியும்தான். அந்தக் கால அரசர் அதுவும் சக்கரவர்த்தியை யாராவது கேட்கமுடியுமா?.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.