பெருகிவரும் குடிநீர் பிரச்சனையும், வறட்சி நிவாரணமும்!
பவள சங்கரி
தலையங்கம்
நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெறும் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பல ஆயிரம் கோடி உரூபாய்கள் வறட்சி நிவாரணத்திற்கு ஒதுக்கியுள்ளனர். இந்தத் தொகை வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் அளிக்கப்படுமா அல்லது பெரும் நிலக்கிழார்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுமா என்று தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. அனைத்து நீர் நிலைகளும் வெகு வேகமாக வறண்டு வருகின்றன. இதற்கு அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. ஆற்றுப் படுகைகளிலும், காய்ந்துள்ள வாய்க்கால்களிலும் ஆழ்துளைக் கிணறுகள் ஊருக்கு நான்கு என்ற கணக்கில் தோண்டினாலே தண்ணீர் பஞ்சம் நீங்கிவிடும். குறிப்பாக காவேரி, பாலாறு, தாமிரபரனி, வைகையிலும் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டால் அந்தந்த பகுதியில் உள்ள ஊர்களுக்கு வறட்சியைப் போக்க தண்ணீர் அளிக்க முடியும். இதே போல கண்மாய்களிலும், வறண்ட வாய்க்கால்களிலும் தூர்ந்து போன குளக்கரைகளிலும் இந்த ஆள்துளைக் கிணறுகள் தோண்டினால் நீர் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். இதற்கு அரசு ஆவண செய்யுமா?