பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் (பாகம் – 3)

1

தொகுப்பு – புவனா கோவிந்த்

 

கர்ப்பக் கால கவனிப்பு

கர்ப்பிணிகள், நாவற்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

கர்ப்பிணிகள் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாகக் கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்து விடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள் அது தேவையற்றது.

கர்ப்பிணிப் பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும், அடிக்கடி மயக்கமும் வராது.

வயிற்றில் குழந்தை வளர வளர, அதன் அழுத்தத்தினால் குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

பிரசவக் காலத்துக்குப் பின் வயிற்றுத் தசைகள் வலுப் பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடற் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை உணவுகள் விதவிதமாக இருக்கும்.

கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிரசவம் முடிந்த சில நாட்களில், கர்ப்பக் காலத்தில் விரிவடைந்த வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டி விடுவார்கள் அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்குக் காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் (பாகம் – 3)

  1. மருத்துவக்குறிப்புக்கள் வர்வேற்கப்படவேண்டியவை தான். இரு எச்சரிக்கைகள் தேவை. 1. இவை வேத வாக்கு அல்ல. அனுபவ வைத்தியம். வியாதியோ, மருந்தோ, ஆளைப்பொறுத்து. எனவே, இது உங்கள் மருத்துவரின் ஆலொசனைக்கு ஈடு அல்ல என்பதே. உதாரணமாக, கர்ப்பிணிகளுக்கு தற்காலிகமாக, நீரழிவு நோய் வரக்கூடும். அது வேறு. நீரழிவு 1 & 2 வேறு.
    என்னிடம் பல சுகாதார சம்பந்தமான செய்திகள், ஆதாரத்துடன், பொறுப்புணர்ச்சியுடன் மருத்துவ சமூகத்தால் தொகுக்கப்பட்டது + அனுபவம் உளன. யாராவது கேட்டால், உரிய விடை அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *