மீ.விசுவநாதன்

ஸ்ரீ மகாசன்னிதானம்

 “அன்பே சிவம் “

இறைவனுண்டா ஏமாற்றா? – என்
ஏக்கத்தைத் தாய்க்குத் தெரிவித்தேன்
நிறைமனத்தில் அன்புவைநீ – அந்த
நிமிடமுதல் இறையே நீயென்றாள் .

தெய்வமுண்டா கிடையாதா ? – குருவே
தெளிவுதாரீர் எனக்கே எனக்கேட்டேன்
ஐயமின்றி உண்டென்றார் – அதை
அனுபவத்தில் கண்டே உணரென்றார்.

கடவுளுண்டா கற்பனையா ? – இரு
கண்மூடிக் கேட்டேன் எனக்குள்ளே
அடமனிதா உன்னைநம்பி – நீ
வைக்கின்ற அடியே கடவுள்தான்.

(இன்று 17.10.2017 பிரதோஷம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.