கட்டுரைகள்

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 21

-மேகலா இராமமூர்த்தி இராமன் பதற்றத்தோடும் கவலையோடும் இலக்குவனும் சீதையும் தங்கியிருக்கும் இலைக்குடில் நோக்கி விரைந்துவந்துகொண்டிருந்த வேளையில் ஆங்குச் சீதையின் நிலை என்ன என்பதைக் கவனிப்போம். மாரீசன் இராமன் குரலில் ”சீதா! இலக்குவா!” என்று கத்திவிட்டு உயிர்நீத்ததால் சீதை கலக்கமடையக் கூடும் என்று இராமன் ஊகித்ததுபோலவேதான் நடந்தது. இராமனின் ஓலக்குரல் காதில் விழுந்ததும் துணுக்குற்ற சீதை, இராமனுக்கு ஏதோ பேராபத்து நேர்ந்துவிட்டது என்றெண்ணி மயங்கிக் கீழே விழுந்தாள். இடியுண்ட நாகம்போல் துன்புற்ற அவள், மானைப் பிடித்து வா என்று ஏவி, கணவனோடு கூடிவாழும் நல்வாழ்வைப் பேதையாகிய ...

Read More »

இன்று இராஜாஜியின் திருநாள்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 1961 மாசி நடுப்பகுதியில் தமிழரின் உரிமைக் கோரிக்கையை முன்வைத்து இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அரசு அலுவலகங்கள் முன்பு அறவழிப் போர் நிகழ்த்தினர் தமிழ் மக்கள். அக்காலத்தில் சென்னையில் மாணவர்களாக இருந்த நாங்கள் தமிழ்நாட்டு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்தோம். இராஜாஜியையும் சந்தித்தோம் அவர் தனது சுயராஜ்யா இதழில் இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்க வேண்டும் என எழுதினார். இராஜாஜி எழுதிய வரிகளைக் கீழே தந்துள்ளேன். அறிஞர் அண்ணாதுரை சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தி ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 25 (ஊர்ப் பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை பலதரப்பட்ட பெண்களைப் பற்றியதாக அமையும் இக்கட்டுரையுள்  நல்கூர்பெண்டிர், ஆளில் பெண்டிர், அரியல் பெண்டிர்,  சீறூர்ப்பெண்டிர், பேஎய் பெண்டிர், அயலில் பெண்டிர் ஆகிய அனைவரும் ஊர்ப்பெண்டிர் என்னும் தொகைப் பாத்திரத்துள் அடங்கி விடுகின்றனர். ஊர்ப்பெண்டிர் பண்புகள்  தோழி, தாய், தலைவி ஆகியோரின் பேச்சில் ஊர்ப்பெண்டிர் வசைபாடப் பெறுகின்றனர். “கொடிது அறிபெண்டிர்” (அகம்.- 20); “வெவ்வாய்ப் பெண்டிர்” (அகம்.- 50, 250; குறுந்.- 373; நற்.- 133); “அலர்வாய் ...

Read More »

Online Teaching and Learning – Problems and Solutions

V. Tamilselvi Assistant Professor Department of Business Administration Parvathy’s Arts and Science College, Dinigul Introduction Online learning is education that takes place over the Internet. It is often referred to as “e- learning” among other terms. However, online learning is just one type of “distance learning” – the umbrella term for any learning that takes place across distance and not in a traditional classroom. Online learning is catalyzing a pedagogical shift ...

Read More »

இயற்கை மொழிச் செயலாக்கங்களின் தற்போதைய போக்குகள் & சவால்கள்

முனைவர் மோ. ஜெயகார்த்திக் உதவி இயக்குநர் (கல்வி), தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை – 25 மின்னஞ்சல்: [email protected]  முன்னுரை இயற்கை மொழிச் செயலாக்கம் (Natural Language Processing)  என்பது கணினி விஞ்ஞானத்தில் அதிக ஆராய்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு துறையாகும். NLP, கணினிகள் மற்றும் மனித மொழிகளுக்கிடையில் ஒரு  பரஸ்பர தொடர்பினை ஏற்படுத்துகின்றது. இயற்கை மொழி ஆய்வுக் குறியீடுகள் மற்றும் செயற்பாட்டுத்  தொகுப்புகள் மற்றும் மாதிரி தரவுகள்  என்பனவற்றைத் தன்னகத்தே உள்ளடக்கி இருப்பதால் இயற்கை மொழிச் செயலாக்கத்தை (Natural Language Processing) எளிதில் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 20

-மேகலா இராமமூர்த்தி சீதையைக் கவர்தல் உனக்கும் உன் குடிக்கும் கேடாய் முடியும் என்றுரைத்த மாரீசனைக் கடுஞ்சொற்களால் நிந்தித்த இராவணன், ”உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை மாமனே! எனக்கு நீ உதவினால் பிழைப்பாய்; இல்லையேல் என் வாளால் உனைக் கூறாக்கிவிட்டு யான் எண்ணியதை முடிப்பேன்” என்று உறுமவும், ”மனச் செருக்கோடு தருக்கித் திரிபவர் அழிவது உறுதி என்பது தத்துவ வார்த்தையன்றோ” என்று தன்னுள் எண்ணி, உருக்கிய செம்பின்மீது வார்த்தநீர் அடங்குதல்போல் அடங்கிய மாரீசன், ”இராவணா! உன்னுடைய நன்மைக்காகவே இத்தனையும் சொன்னேன்; என்னுடைய சாவுக்காக அஞ்சியன்று! என்ன ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 24 (முதுவாய்ப் பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை ‘முதுவாய்’ என்னும் அடைத்தொடர்  தொகையிலக்கியத்தில் பல பெயர்களுக்கு முன்னர் பயின்று வருவதைக் காண்கிறோம். ‘முதுவாய் வேலன்’, ‘முதுவாய்க் குயவன்’, ‘முதுவாய்ப் பெண்டிர்’ என்றெல்லாம் வழங்கியுள்ளது. இக்கட்டுரை முதுவாய்ப் பெண்டிர் பற்றியதாக மட்டும் அமைகிறது. கட்டுவிச்சியின் வாழ்க்கை நிலை   முதுவாய்ப் பெண்டிர் என அழைக்கப்  படுபவர் கட்டுவிச்சிகள் ஆவர். இவர்களது தொழில் கட்டுப் பார்த்துக் குறி சொல்வதாகும்.  வாய்விட்டுக் கூறும் அத்தொழிலைப் பன்னெடுங் காலமாகச் செய்து  வந்தவர் ஆதலால்; ...

Read More »

தமிழக விளையாட்டுகள்

முனைவர் த. ஆதித்தன், இணைப் பேராசிரியர், அரியகையெழுத்துச் சுவடித் துறை, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் – 613010. கலைகளைப் பல்வேறு வகைகளாகப் பகுத்தறிந்துள்ளனர் நம் முன்னோர். அவற்றினுள் விளையாட்டுக் கலை வாழ்வோடு பிணைந்த ஒன்றாகும். “அந்தந்த நாட்டின் இயற்கை அமைப்பு, சுற்றுப்புறச் சூழல், மக்களின் சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், சமயங்கள் முதலியவற்றின் தன்மைக்கேற்ப கலைகள் வளர்ச்சி பெறும்” என்று மயிலை. சீனி. வேங்கடசாமி (தமிழர் வளர்த்த அழகு கலைகள்) அவர்கள் குறிப்பிடுகிறார். அவ்வாறே விளையாட்டுகளும் மக்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப தனித்தன்மைகளுடன் திகழ்கின்றன. ...

Read More »

டிரோன் மூலம் டெலிவரி

அண்ணாகண்ணன் அத்தியாவசியப் பொருள்களை டிரோன் மூலம் டெலிவரி செய்ய முயலலாம். புயல், மழை, வெள்ளம் போன்ற நேரங்களில், மனிதர்களால் செய்ய முடியாத பணிகளை டிரோன் போன்ற எந்திரங்களால் செய்ய முடியும். ஹெலிகாப்டர் அல்லது விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி எறிவதை விட, விமானத்திலிருந்து டிரோன்கள் பறந்து பயனாளிகள் கையில் சேர்ப்பது போல் செய்தால் இன்னும் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் இருக்கும். டிரோன்களைப் பொருள் விநியோகத்திற்கு மட்டுமின்றி, இருளான பகுதிகளில் ஒரு தற்காலிக நகரும் மின்விளக்காகவும் தொலைபேசி, இணையம் ஆகியவற்றை வழங்கும் ஒரு நகரும் கோபுரமாகவும் பயன்படுத்த ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 23 (முது பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப. நி.), முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகப்பாடல்களில் முதுசெம் பெண்டிர், முதுவாய்ப் பெண்டிர் என இருதிறத்துப் பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுள் முதுபெண்டிர் பற்றியதாக மட்டுமே இக்கட்டுரை அமைகிறது. இல்லறப் பெண்டிர் முதுபெண்டிர் செம்மை என்னும் அடைமொழி பெற்றுச் ‘செம்முது பெண்டிர்’ (நற்.- 288) எனவும்; ‘முதுசெம் பெண்டிர்’ (அகம்.- 86) எனவும் அழைக்கப்படுன்றனர். இது கற்பு நெறியில் வழுவாமல் நிற்பவர் என்னும் பொருள்படுகிறது. கற்பின் அடையாளம்  ஆகிய அருந்ததியைச் செம்மீன் என ...

Read More »

சரசுவதி பண்டாரம் எனும் நூலகம்

சேசாத்திரி ஸ்ரீதரன் பண்டு கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக, ஆடல் இசைக் கலைக் கூடங்களாக மட்டுமே இருக்கவில்லை அவை இலவச உண்டு உறையும் வேதக் கல்வி நடுவமாகவும் ஆயுர்வேத மருத்துவச் சாலையாகவும் விளங்கின. அத்தோடு நூலகங்களும் கோவில்களைச் சார்ந்து இயங்கின. வேதக் கல்வியொடு நில்லாமல் இலக்கியக் காவியம், தொன்மமாம் புராணம், வரலாறு, இலக்கணம், தெய்வியல் கூறும் மீமாம்சம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன. இவை அல்லாமல் ஆயுர் வேத மருத்துவம், சோதிடம் போன்ற சிறப்பு புலக் கல்வியும் கற்பிக்கப்பட்டன. இதனால் இவற்றுக்கான நூல் தேவை இயல்பாகவே எழுந்தது. மேலும் ...

Read More »

உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away

உருசியத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubiansky) (வயது 80), மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு வல்லமை மின்னிதழ், வாசகர்கள் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தார். தமிழில் சரளமாகப் பேசவும் ...

Read More »

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 19

-மேகலா இராமமூர்த்தி இராவணன் மனத்தில் சூர்ப்பனகையால் விதைக்கப்பட்ட சீதை மீதான காம விதை விறுவிறுவென வளர்ந்து விருட்சமானது. அதன்பின்னர் அரியணையில் அமர்ந்திருக்கவோ அமைச்சர்களோடு அளவளாவவோ அவனால் இயலவில்லை. விருட்டென ஆசனத்திலிருந்து எழுந்தான். அவன் உளக் குறிப்புணர்ந்த ஏனையோரும் அவையினின்று வெளியேறினர். பிறன்மனை நயத்தலைப் பாவமென்று எண்ணாத இராவணன், சீதையைக் காணும் ஆசையால் மனம் நைந்தான். சோலையின் நடுவே அமைந்திருந்த தன் மாளிகைக்குச் சென்று அமளியில் வீழ்ந்தான். ”பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடீ கோலக் கிளிமொழியும் செவியில் குத்தல் எடுத்ததடீ” என்று மகாகவி படைத்த ...

Read More »

அஞ்சலி: க்ரியா ராமகிருஷ்ணன்

அண்ணாகண்ணன் தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். ...

Read More »

அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 22 (மறுகிற் பெண்டிர்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.), முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர், ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. முன்னுரை அகஇலக்கியத்தில் ஊர்ப்பெண்டிர், சீறூர்ப் பெண்டிர், அயலில் பெண்டிர், சேரிப்பெண்டிர், முதுபெண்டிர், முதுவாய்ப் பெண்டிர், நல்கூர் பெண்டிர்,  அரியல் பெண்டிர், கெடுமகப் பெண்டிர், ஆளில் பெண்டிர், மறுகிற் பெண்டிர் என பலதரப்பட்ட பெண்டிர் இடம் பெற்றுள்ளனர். சேரிப் பெண்டிர் சிறுபாத்திரத் தகுதி பெற்றமை பற்றி முன்னர்க் கண்டோம். இக்கட்டுரையில் மறுகிற் பெண்டிர் பற்றிக் காண்போம். தெருப்பெண்டிர் மறுகு என்பது தெருவைக் குறிக்கிறது. தலைவி வசிக்கும் தெருவில் தாமும் ...

Read More »