101 அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

0

புது தில்லி, செப்டம்பர் 29, 2010

பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை, வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 101 அதிகாரிகளுக்கு எதிராகக் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்று மத்திய கண்காணிப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2010 ஆகஸ்ட் மாதம், தன்னிடம் வந்த 1298 வழக்குகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் தீர்த்து வைத்தது. இவற்றுள் 920 புகார்கள், தேவையான நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 37 புகார்கள் புலனாய்வு மற்றும் அறிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 213 புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டது.

கனரா வங்கி அதிகாரிகள் 18 பேர், விஜயா வங்கி அதிகாரிகள் 9 பேர், மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகள் 15 பேர், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 8 பேர், ரயில்வே அதிகாரிகள் 5 பேர் உள்ளிட்ட 101 அதிகாரிகளுக்குக் கடும் அபராதம் விதிக்க ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. எஞ்சிய 19 வழக்குகள் இந்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டவையாகும்.

ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 52 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். சில துறைகளில் ஆய்வு நடத்தி ரூ.2.60 கோடி வசூல் செய்யப்பட்டது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.