இன்னும் இருக்கிறது

பாஸ்கர்

இன்னும் இருக்கிறது இந்த வாழ்க்கை
ஓட வேண்டிய தூரம் மேலும் உண்டு
வசை பாட இன்னும் பலர் வரிசையில்
பற்களை கடிக்க சந்தர்ப்பம் பல உண்டு
தனித்து நின்று பேச வேண்டியதும் உண்டு
பழிக்க வேண்டிய பட்டியல் பெரிதாய் போய் விட்டது
அந்த காலத்தில் என புலம்பும் நேரம் அருகில் நிற்கிறது
பெருசு என்றால் மரியாதை போய் கோபம் வருகிறது
எதையும் மறுக்கவே பிறந்தது போலவே வாழ்க்கை
சந்தேகங்கள் பெரிதாகி கேள்வியே மறந்து விட்டது
ஆனாலும் என்ன, தூக்கமும் மயக்கமும் உடன் உண்டு
இடையிடையே வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன்.
மூச்சு விட மறக்காமல்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க