இலண்டனில் சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றிய மாநாடு

0

சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு, அக்டோபர் 23 சனிக்கிழமை (23.10.2010) இலண்டனில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச தமிழ்ச் செய்தியாளர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இம்மாநாடு, மேற்கு இலண்டனில் Watford Road, Northwick Park, Harrow HA1 3TP  என்ற முகவரியில் உள்ள Westminster பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இம்மாநாடு, மாலை 5.00 மணிவரை நடைபெறும்.

”இன்றைய உலகமயமாக்கலில், ஊடகத் துறையும்; தமிழ்த் தேசியப் பிரச்சனையும்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் இலங்கை, இந்தியா, ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளிலிருந்து தமிழ் மற்றும் பிறமொழி ஊடகவியலாளர்களும் சர்வதேச ஊடக மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் பேச்சாளர்களாகக் கலந்துகொள்கிறார்கள். பேச்சாளர்களின் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

வரையறுக்கப்பட்ட ஆசனங்களே இருப்பதால், அனுமதியை முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளுமாறு நிர்வாக சபை கேட்டுகொள்ளுகின்றது. நுழைவு அனுமதி விடயத்தில் ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேலதிக விபரங்களை www.iataj.org என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

ஊடகங்கள் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 44 78 1011 6032

–  கோபி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *