யாழ்ப்பாணத்தில் சச்சிதானந்தன் உரை

0

Sachidanandan_Maravanpulavuயாழ்ப்பாணப் பல்கலைக் கழக இந்து நாகரீகத் துறைத் தலைவர் முனைவர் வேதநாதன் தலைமையில், இரு நிகழ்ச்சிகளில் மறவன்புலவு க.சச்சிதானந்தன் உரையாற்றினார்.

முதலாவதாக, இந்து நாகரீக முதுகலை மாணவர்கள் 50 பேர் முன்னிலையில் 16.10.2010 அன்று காலை 08.30 மணிக்கு ‘இக்காலத்துக்கு ஏற்ற சைவநெறி’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பகுத்தறிவும் அறிவியலும் கலந்த சைவ நெறியை மூடநம்பிக்கைகளுள்ளும் சாதிக் கட்டமைப்புக்குள்ளும் பழமை பேணலுக்குள்ளும் கிரியைகளுக்குள்ளும் தள்ளும் பாடத்திட்ட முறையை மாற்றவேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினார்.

காலத்துக்கு ஏற்ற தேவைகளுக்காக எழுந்த சைவ நூல்களின் பொழிப்புகளை அறிவியல் மற்றும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் எடுத்து நோக்க, சைவ நெறி முதுகலை மாணவருக்கு உயிர்க் கொள்கைகள் பற்றி உயிரியிலாளரும், காலம் மற்றும் இடம் பற்றிய கொள்கைகளைப் பௌதிகவியல் பேராசிரியர்களும் பாடம் நடத்தவேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

மெண்டல் முன்னரும் வாட்சன் கிறிக்கு பின்னரும் சொன்னவற்றைத் திருமூலர் முன்பே சொன்னார் என்பதை உயிரியல் மாணவருக்குக் கூறவேண்டிய தேவையைப் படம் போட்டு விளக்கினார்.

துக்கம் பற்றிய புத்தக் கோட்பாட்டுக்கு மாற்றான சைவ நெறி அறிவைப் புத்த நெறியின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளாமல் சைவ மாணவர் படித்து வருவதன் குறைபாட்டைப் போக்கப் புத்த நெறியாளரின் விளக்கங்களைக் கேடடறியும் வாய்ப்பு முதுகலை மாணவருக்கு வேண்டும் என்றார்.

படைப்புக் கொள்கைக்கும் ஆதி அந்தமற்றதைக் கூறும் சைவ நெறிக்கும் உள்ள தொடர்பைக் கிறித்தவ நெறியாளர் வழி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

மெய்கண்ட சாத்திரங்களை மட்டும் ஊன்றிப் படிப்பதால் கால ஓட்டத்தில் பின்னோக்கிப் போகும் உளவியல் போக்கு, உயிர்க் கூர்மைக்கு ஒவ்வாதது என்றார்.

வினா-விடை நேரம் நீண்டு புலமைத்துவக் கருத்துகளை மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்துரையாடினர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *