ஆயிரம் வருடத்து மரப்பாச்சியும் அழகான 2011உம்

0

குமரி எஸ். நீலகண்டன்

happy_2011

வருடங்கள் வளர வளர
வளர்ந்துகொண்டே
இருக்கிறோம்.

உடலெங்கும் மின் ஒளியில்
பகட்டாய்ப் பறக்கிறது பூமி.

காங்கிரீட் காடுகளில்
வாடாத பூக்களுடன்
பிளாஸ்டிக் தாவரங்கள்…

உயிர்களை உன்னதமாய்க்
காக்கிறோம்…

கொசுக்கள்.. வைரஸ்..
பாக்டீரியாக்களை
புதிது புதிதாய்
உருவாக்கியும் வளர்த்தும்…

வீட்டினுள் குளிரூட்டி
வெளியே அக்னி
வளர்க்கிறோம் .

பூமியின் அழுக்கான
கைகளின் வழி பணங்கள்
அவமானத்துடன்
அலைகின்றன

கட்டைப் பஞ்சாயத்தை
இன்னுமொரு
கட்டை பஞ்சாயத்தே தட்டித்
தனக்காய்த் தீர்ப்பு சொல்கிறது.

ஆயிரம் வருடத்தில் பிறந்த
அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
மிகுந்த சலிப்புடன்
குழப்பங்களின் குழைவினுள்
குதூகலமாய் வரும்
குழந்தை 2011ஐப் பார்க்கிறது

பரிதாபமாய்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *