வெ.திவாகர்

“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும்.

சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர் கடலூரில் இருந்து இதற்காகவே வந்த டாக்டர் தி.வாசுதேவன் எனும் அரசாங்க மருத்துவர். புத்தகங்கள், அதிலும் மிகப் பழமையான ஆவணங்கள் கொண்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்து வைத்தால் பிற்காலத்தில் எத்தனை உபயோகப்படும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தகவலை எனக்குக் கொடுத்து உதவியவர், நண்பர் ரீச் சந்திரா தான்.

டாக்டர் தி. வா.வை மின்னுலகக் குழுமத்தினர் பலர் அறிந்திருக்கலாம். இவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு பெயர்க் குழப்பத்தில் எனக்காக தன் பெயரைத் ’தியாகம்’ செய்து, ‘திவாஜி’ என இனி அழைக்கவும் எனப் பிரகடனம் செய்ததோடு அவர் பெயரையும் திவாஜி என்றே கையெழுத்தில் போட்டவர்.

நான் முதலில் ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. திவாஜி, பழமையைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் அப்படியே கடைப்பிடிப்பவர் கூட. சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேத தர்மத்தின் அடிச்சுவட்டில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தொழில் மருத்துவமானாலும் மூன்று வேளையும் அக்னிஹோத்திரம் செய்து வருபவர். வேதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு சனாதனியின் கடமை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் கடலூரில் தக்கதொரு வேத பாடசாலை (ஸ்வாமிநாதர் வேத பாடசாலை) அமைத்தவர். இந்த வேத பாடசாலை பற்றி அறிய http://www.swaminathar.org/ என்கிற தளத்திற்குச் சென்றால் எல்லா விவரங்களும் புரியும், இவர் எளிமையும், ஸனாதான தர்மத்தில் இவருக்கு உள்ள இந்தக் கடமையின் நேர்த்தியும் புரியும்.

பழமை என்றில்லாமல் புதுமையான தற்காலத்து கணினி தொழில்நுட்பத்தை இவர் எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மிகவும் போற்றத்தக்கது . ’தொண்டுகிழங்களுக்குக் கணினி’ எனும் இவரது வலைப்பகுதியில் எளிய வகையில் எல்லோரும் புழங்கக்கூடிய வகையிலே கணினித் திறம் பெறுவது எப்படி என்று விளக்கி வருகிறார். இவரது இந்த வலைப்பகுதியிலே http://techforelders.blogspot.in/ சென்று பார்த்தாலே இவர் எப்படியெல்லாம் ஞானம் என்பது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது புரியும்.

திவாஜியின் இந்தச் சமூக சேவை, மிகவும் பாராட்டுக்குரியது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் இந்தக் கலியுகத்தில் இப்படியும் சிலர் தேர்ந்தெடுத்த சில நல்ல சேவைகளைச் செய்வதால்தான் நாடெங்கும் மழை தவறாமல் பெய்து வருகின்றதோ என்று நினைக்குமளவுக்குத் தொண்டு செய்து வரும் டாக்டர் திவாஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து நாங்கள் கௌரவம் தேடிக்கொள்கிறோம்.

**** **** ****

கடைசி பாரா: அடடா.. இத்தனைப் பூக்களும் (புக்களும்?) ஒரு வாகனத்துக்காகவா தேமொழி?

என்ன ஒரு செக்கச் சிவப்பு
கண்ணைக் கவரும் வாளிப்பு
மதியை மயக்கும் வனப்பு
அழகிய பளபளப்பு மினுமினுப்பு

பதிவாசிரியரைப் பற்றி

12 thoughts on “இந்த வார வல்லமையாளர்

  1. Ah! Namma Dhiva Annan!! Congrats Dhiva Anna!!

    And, தேமொழி!! Great! Happy and Congrats to you as well.

  2. “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

    என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும்.

    🙂 PazamaiPesi /Manivasakam

  3. திவாஜிக்கு வணக்கங்கள், தேமொழிக்கு வாழ்த்துகள், திவாகர்ஜிக்கு நன்றிகள்! 🙂

  4. அருமை நண்பர் திவாஜிக்கு என் வாழ்த்துக்களை கூறுவது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. தேமொழியை கண்டுபிடித்தது நான் என்று உரிமை கோரி, அவரை வாழ்த்துகிறேன்

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    http://www.olitamizh.com

  5. திரு திவா அவர்களுக்கும் தேமொழிக்கும் வாழ்த்துகள்.  இங்கே பூக்கள் இருக்குமோனு பார்க்க வந்தேன்.  :)))))

  6. ஆஹா. நான் மாட்டினேனா? :-))))
    நன்றி திவா, மணி, கவி, இ சார்!

  7. கூட கீ அக்கா, பார்வதி அக்காவும். அவங்க கமென்ட்ஸ் இப்பத்தான் தெரியுது!

  8. வல்லமையாளர் விருது பெற்றுள்ள டாக்டர். திவாஜி ஐயா அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்!!

    வாழ்த்துகள், தேமொழி! 

  9. இவ்வார வல்லமையாளர் டாக்டர். திவாஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    கடைசி பத்தியில் இடம் கொடுத்து, என் கவிதை வரிகளைப் பாராட்டிய திரு. திவாகர் அவர்களுக்கும், வல்லமையின் ஆசிரிய மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

    வாழ்த்துகள் கூறிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

    அன்புடன்
    ….. தேமொழி

  10. வல்லமையாளர் திவாஜிக்கும், சிறப்பு பதிவர் தேமொழிக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  11. பழைமையின் வேரில் நின்று புதுமையின் கனிகளை நுகரும் திவாஜி அவர்களுக்கும் கவிதாயினி தேமொழிக்கும் வாழ்த்துகள். தக்கவர்களைக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் எனத் தொடர்ந்து கவுரவிக்கும் திவாகர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *