கனம் கோர்ட்டார் அவர்களே! – 18

1

 

இன்னம்பூரான்

 

யாமொன்று நினைக்க…

 

அக்காலத்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு.எம்.பதஞ்சலி சாஸ்திரி பற்றி எழுத நினைத்தேன். சதாசிவம் வந்து விட்டார். ஈரோடு மாவட்டம்: கடப்பநல்லூர் கிராமம். விவசாயகுடும்பம். அதில் முதல் பட்டதாரி. கிராமத்திலேயே முதலாக வழக்கறிஞர் சன்னது பெற்றவர். 1996லேயே இளம்வயதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி; பொதுவாக, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்ந்தவர்களுக்குத் தான் உச்சநீதிமன்றத்துக்கு உயர்வு கிடைப்பது வழக்கம். இவருக்கு டபிள் ப்ரமோஷன். 2007ல் நேராக உச்ச நீதிமன்றம். ஜூலை 19 அன்று உச்சநீதி மன்றத்து தலைமை நீதிபதியாக பதவி ஏற்கப்போகும் இந்த தமிழ்மகனை வாழ்த்துவோம்.

இவருடைய முக்கியமான தீர்ப்புகளில் சில: ரத்ன சுருக்கமாக:

  • ஒரு ரிலையன்ஸ் முட்டல் வழக்கில் அவர் கூறியது: இயற்கை வளங்களை அரசு வாரியங்களுக்கு மட்டுமே கொடுப்பது நலம். நம் தேசீய குடியரசில், அவை மக்களுக்கு சொந்தம். அரசு அவர்களுக்காக, அவற்றை பேணவேண்டும்.
  • அநேகருக்கு ஒடிஷாவில் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்ற பாதிரியும் அவரது மகன்கள் காரில் வைத்துக் கொளுத்தப்பட்டது நினைவில் இருக்கலாம். அந்த வழக்கில் மஹாத்மா காந்தியின் சர்வமத சம்மதம் இந்தியாவில் பரவவேண்டும் என்ற நம்பிக்கைத் தெரிவித்தார்.
  • மாயாவதி மீது சீபீஐ போட்ட வழக்கு தர்மம் அல்ல என்று புறக்கணித்து விட்டார்.
  • சஞ்சய் தத்துக்கு ஐந்து வருட சிறை தண்டனை கொடுத்ததும் இவரே.
  • பெண்கள்/குழந்தைகள் மீது பலாத்காரம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.

இன்னம்பூரான்

30 06 2013

உசாத்துணை:

http://www.thehindu.com/news/national/justice-sathasivam-first-judge-from-tamil-nadu-to-become-cji/article4863744.ece?homepage=true

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கனம் கோர்ட்டார் அவர்களே! – 18

  1. திரு சதாசிவம் அவர்களுக்கு அவரது உழைப்பும் அத்துடன் சுக்கிரதசையும்  சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன் ஒரு தமிழ் மகன் பெரிய பதவிக்கு வந்தால் மனம் மகிழ்ச்சியடைகிறது வாழ்த்துகள்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *