திவாகர்

images (4)இந்த வார வல்லமையாளராக டாக்டர் நா. கணேசனை விருது வாங்க அழைத்திருப்பதற்கு இரண்டு விசேஷ காரணங்கள் உண்டு. ஒன்று எனக்கு இதயத்துக்கு நெருக்கமான மகாகவி பாரதி, இரண்டு ஆந்திரத்தில் நான் மிகவும் மதித்துப் போற்றும் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு. இருவருமே சமகாலத்தவர், அதிலும் வீரேசலிங்கம் பந்துலு பாரதியை விட வயதில் மிக மூத்தவர் கூட (முப்பது வருடங்களுக்கும் மேலாக)

ராஜமுந்திரியைச் சேர்ந்த வீரேசலிங்கம் பந்துலு வாழ்ந்த காலத்தில் ஆந்திராவின் நிலையைப் பார்க்கவேண்டும். எங்கும் ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக மலிந்த காலம், அதை அப்படியே வளர்த்து தமக்குச் சாதகமாக்கிக்கொண்ட ஜமீன்கள், அவர்களுக்குத் துணை நின்ற ஆங்கிலேயர், முரட்டுத்தனமான மூட நம்பிக்கைகள், ஒரு பெண் விதவையென்றால் அதிலும் நோய்கள் மலிந்த அக்காலத்தில் இளவயதில் மரணம் காணும் ஆண்களின் மனைவிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், விதவைப்பெண்கள் தாசி குலங்களில் தள்ளப்பட்டு இழிநிலைக்கு ஆளான காலகட்டம், கல்வியறிவே தெலுங்கு மாநிலத்தைத் தாண்டினால்தான் கிடைக்கும் என்ற நிலைமை, மேல்தட்டு வர்க்க அராஜகம் என்பது கட்டவிழ்ந்து கிடந்த நிலை, இவையெல்லாம் இந்த ஆந்திரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவைகளா என்பதை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாகவும், பரிதாபமாகவும் இருக்கிறதுதான்.

வீரேசலிங்கம் பந்துலு இந்த அநியாயங்களை தைரியமாக எதிர்த்தவர். பெண்கள் முன்னேற வழி வகுத்தவர். தாய்க்குலம் முன்னேறவில்லையென்றால் இந்த உலகமே தேவையில்லை என்று தைரியமாக எழுதியவர். இவர்தாம் தெலுங்கில் முதன்முதலாக நாவல் எழுதியவர். நூறு புத்தகங்களுக்கும் மேலாக எழுதியவர். அத்தனை புத்தகங்களுமே சீர்திருத்தக் கருத்தைத்தான் சொல்லும். விதவா விவாகத்தில் முன் நின்றவர். வீதிநாடகங்கள் மூலமாக விதவைப்பெண்களை தைரியப்படுத்தி மறுவிவாகத்துக்கு அவர்களைத் தயார்படுத்திய அதிசயத்தை இப்போதும் கூட ஆந்திர இலக்கிய உலகம் இவரைப் போற்றிக் கொண்டே இருக்கிறது.

வீரேசலிங்கம் பந்துலு நம் மகாகவியின் இனிய நண்பர். வீரேசலிங்கம் பந்துலுவின் இந்த ஆந்திர புரட்சியும் சமூக சீர்திருத்தமும் உலகம் அறிய வேண்டுமென்ற கருத்தில் அவரைக் கதாநாயகனாகக் கொண்டு தமிழில் ‘சந்திரிகையின் கதை’ என்ற கதையை எழுதினார் பாரதி. கதையில் வீரேசலிங்கம் பந்துலுவைத் தவிர ஏனைய பாத்திரங்கள் கற்பனை என்றாலும் பாரதிக்கு மிகவும் பிடித்த ‘பெண் விடுதலை; என்ற நோக்கம் இங்கு மிக நன்றாகக் கையாளப்படுத்தப்பட்டுள்ளது.

திரு நா. கணேசன் இந்த வாரம் மறைந்த ரா. பத்மநாபனின் எழுத்துக்களிலிருந்து சில வரிகள் வீரேசலிங்கம் பந்துலுவைப் பற்றி எடுத்துப் பதித்துள்ளார். திரு கணேசனுக்கு ஒரு நன்றியுடன் அந்த வரிகளை சற்று ஒரு முறை பார்ப்போம்.

Bharati strongly believed in social reform, and therefore he had great admiration for Kandukuri Veeresalingam Pantulu (1848-1919). Veeresalingam was 34 years senior to Bharati, and he was a close friend and co-worker of Bharati’s first editor, G. Subramania Iyer Veeresalingam was a great social reformer of the times, and Bharati has brought in both Veeresalingam and G. Subramania Iyer as real life characters in his social novel (incomplete) titled “Chandrikaiyin Kathai” (The Story of Chandrika).

The nove1 starts with the widowing of Visalakshi, paternal aunt of Chandrika, left helpless. Visalakshi goes to Madras with the orphaned Chandrika, to seek the help of G. Subramania Iyer to get her a husband. Iyer sends her to Veeresalingam with a letter.

Visalakshi goes to Rajahmundry to be disappointed. She learns that Veeresalingam has gone to Madras and is staying at a house in Egmore. She comes to Madras and meets Pantulu, says Bharati:

“… Inside, he was alone, seated in a deck chair and writing a book.

“Visalakshi saluted him and gave him the letter from G. Subramania Iyer. Veeresalingam asked her to sit in the chair opposite him. She sat there with Chandrika in her lap, Veeresalingam Pantulu read the letter in full, and then asked her in Tamil, ‘What day is today?’ She replied in Telugu, ‘It is Budhavaaramu.’

“Meeku Telugu vachchunaa?’ (Do you know Te1ugu?) Pantulu asked.

“Avunu, chaala baaga vachchunu’ (Yes, I know it very well.) said Visahkshi.”

Husband-Wife Team

Bharati then goes on to narrate how Pantulu’s wife came in while he was querying Visalakshi about her attainments. All this is portrayed very naturally and the picture is effective.

When Mrs. Pantulu learns of the reason for Visalakshi’s visit, she recalls that Gopala Iyengar, Deputy Collector in Tanjore, who had expressed an interest in marrying a widow, had called, and she thought this girl would suit him. There is a discussion between husband and wife on the matter. Visalakshi assures Veeresalingam Pantulu that she is willing to wed Gopala Iyengar, although he drinks, hoping to reform him after marriage.

At this juncture Gopala Iyengar himself comes form downstairs. As he is fond of a good dinner, Pantulu asks his wife and Visalakshi to go down and prepare a sumptuous feast. After the feast, Pantulubroaches the subject with Iyengar and he readily agrees under the impression that the servant-maid, who was having the child Chandrika while Mrs. Pantulu and Visalakshi were inside the kitchen, was the prospective girl mentioned by Pantulu. Later when he sees Visalakshi, he says no and insists on his original choice. Despite, difficulties, Pantulu is able to arrange the inter-caste marriage of Gopala Iyengar and the Naidu servant-maid.

As for Visalakshi, requesting Pantulu to arrange a husband for her somewhere else, she goes to stay with some relatives of hers. After some painful incidents she meets a youthful Sannyasi. They fall in love mutually. The young man renounces Sannyasa and marries the widow according to Brahmo rites, with the blessings of Veeresalingam Pantulu.

சரித்திரத்தின் பொன்னேடுகளிலிருந்து சில தங்கங்களை நமக்கு அளித்த டாக்டர் . திரு நா. கணேசன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நன்றிகளுடன் வாழ்த்துகளும்..

கடைசி பாரா: திரு கிரேஸி மோகனின் திருமால் திருப்புகழ்

“அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்

கிருந்த வாறிருக்க -ரமணேசர் 
புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை 
நெருங்க ஞானவித்தை -அருள்வாயே 
அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
அமைந்த யோகநித்ரை, -வனமாலி 
சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய 
இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே 
தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு 
இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள் 
முகுந்த வாவகத்துள் -குடியேற 
புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில் 
பறந்து வாயெனக்கு -துணையாக 
உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும் 
குடந்தை மாநிலத்து -பெருமாளே”

அன்பு  நண்பர்களே,

வணக்கம். கடந்த 23 – 29 ஏப்ரல், 2011 முதல் வல்லமையாளர் விருது  வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வாரம்  நூறாவது வாரம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த 100 வாரங்களில் சுமார் 90 வாரங்கள் திரு திவாகர் அவர்கள் அந்த வார வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் தனித்த ஆற்றலை பலரும் அறியும் வகையிலும், மற்றவர்களுக்கும் அது ஊக்கம் கொடுக்கும் வகையிலும் விருது வழங்கி இப்பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நம் வல்லமையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். இடையில் அவருக்கு முடியாத சில தருணங்களில் திரு இன்னம்பூரன், பேரா. திரு நாகராசன் மற்றும் திரு. பெண்ணேஸ்வரன் ஆகியோரும் இப்பணியை  மேற்கொண்டனர். வல்லமையின் வளர்ச்சியில் பங்குபெறும் அனைவருக்கும் நம் பாராட்டுகளும், நன்றியும் உரித்தாகுக.  வருகின்ற வாரங்களில் திருமதி தேமொழி இப்பணியின்  பொறுப்பேற்றுள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கும் நம் வாழ்த்துகள். அனைவரும் அந்தந்த வார வல்லமையாளர்களுக்கான தங்கள் பரிந்துரைகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு வழங்கவும் வேண்டுகிறோம்.  நன்றி.

அன்புடன்

பவள சங்கரி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. நடுநிலைமையோடு “வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஊக்கம் அளித்து வந்த திரு.திவாகர் ஐயாவின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. பல புதிய எழுத்தாளர்களையும் சரியாக அடையாளம் கண்டு வல்லமையாளர் விருது வழங்கி மேலும் எழுதத் தூண்டிய தங்களின் சீரிய பணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!

    வல்லமையாளர் விருது வழங்கும் பணியை ஏற்கவுள்ள சகோதரி திருமதி.தேமொழி அவர்கள் இப்பணியை மேலும் சிறப்புடன் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

    இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் திரு.கணேசன் அவர்களுக்கும், திருமால் திருப்புகழ் கவிதைகளை சந்த நயத்துடன் வழங்கி பாராஈடுக்களைப் பெற்றுள்ள திர்ரு.கிரேசி மோகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  2. வல்லமையாளர் நா.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களின் தனித்த ஆற்றலைப் பலரின் கவனத்துக்குக் கொண்டு வந்த திவாகர் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகள்.

    கிரேஸி மோகனின் திருமால் திருப்புகழ், திருமாலின் பெருமைகளுடன் சந்தக் கவியில் கிரேஸி மோகனின் ஆற்றலையும் நன்கு வெளிப்படுத்துகிறது. அவருக்கும் நம் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *