உன்னைக் கண்டு நானாட…
–கவிஞர் காவிரிமைந்தன்.
ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெற்றிப்படைப்பு கல்யாணப் பரிசு! பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் படத்திலே கனகச்சிதமாய் பொருந்த இசையமைத்த மேதை ஏ.எம்.ராஜா. இந்திய அளவில் கொண்டாடப்படும் இனிய பண்டிகை தீபாவளியாகும். அந்த தீபாவளி திரைப்படத்தில் காட்சியாக.. அதற்கேற்ற பாடல் கதைக்கேற்ப எழுதித்தர மகிழ்ச்சியின் துள்ளலில் ஒரு முறையும், பின்னர் பிரிவின் வலியோடு மறுமுறையும் இந்த ஒற்றைப் பாடல் சில வார்த்தைகள் மாற்றங்களோடு பரிணமிக்கிறது.
பேராசிரியர் வாணியம்பாடி கவிஞர் அப்துல் காதர் அவர்கள் ஒருமுறை பம்மலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பட்டிமன்ற நடுவராய் பொறுப்பேற்று தமது தலைமையுரையில் குறிப்பிட்ட வரிகள் சிந்தை நிறைந்த ரகம்!
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா..
நம்ம குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கடன் வாங்குவதுபற்றி கற்றுத்தருகிறோம். வாங்குகிற முத்தத்தைக்கூட கடனில் தா.. நான் வட்டியும் முதலுமாகத் திருப்பித் கொடுத்துவிடுவதாக இயம்புவது சிறப்பே.. எனினும் சிறுவர் நெஞ்சில் கடன் மீது பற்று ஏற்பட அல்லவா இது வழிவகுத்துவிடும் என்று கேள்வி எழுப்பினார்.
தீபாவளி என்னும் விழா கொண்டாடப்படும் நாட்களில் வருடம்தோறும் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப்பாடல் அன்றும் இன்றும் என்றும் நிச்சயம் இடம்பிடிக்கிறது..
சித்திரப்பூப்போல சிதறும் மத்தாப்பூ
தீயெதும் இல்லாமல் வெடித்திடும் டேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
காணொளி: -http://youtu.be/z7h_fulvE3M
படம்: கல்யாணப்பரிசு
பாடல்: பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பாடியவர்: ஜிக்கி
இசை: ஏ.எம். ராஜாஉன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா… ஆ ஆ ஆ
உறவாடும் நேரமடா…கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடாஎண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா.. ஆ ஆ ஆ
வளர்ந்தாலே போதுமடா..சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா… ஆ ஆ ஆ
வேறென்ன வேணுமடா…உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
உறவாடும் நேரமடா… ஆ ஆ ஆ
உறவாடும் நேரமடா…
வல்லமையில் 100 வது பதிவை வெளியிட்ட கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அன்புடன்
….. தேமொழி
தன்னுடைய 100ஆவது பதிவை வல்லமையில் வெளியிட்டு முத்திரை பதித்துள்ள கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! தொடரட்டும் தங்கள் வெற்றிப் பயணம்!
அன்புடன்,
மேகலா